(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

கோபம் காணாமல் தான் போயிருந்தது!!

   

அவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்து சேரும் முன்பே மற்றவர்கள் வேனில் வந்து சேர்ந்திருந்தார்கள். காரில் இருந்து இறங்கி சஞ்சீவை ஒரு பார்வை பார்த்து விட்டு, நேரே தோழிகளை தேடி சென்றாள் இந்து. இரண்டு நாட்களாக அறிமுகமாகி இருந்த மற்ற பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தவர்களை கவனித்து விட்டு, கீதாவின் செல்ஃபோனை அழைத்தாள்.

   

“கீதா அக்கா, உங்க கூடவும் வீணா கூடவும் பேசனும் வாங்களேன்...“ என்றாள்.

   

அவள் சொன்ன இடத்திற்கு உடனே வந்து சேர்ந்த இருவரையும் நேராகப் பார்த்து,

   

“நீங்க இரண்டுப் பேரும் என்ன செய்றதா நினைப்பு?” எனக் கேட்டாள்!!!

   

 🌼🌸❀✿🌷

   

ஊரில் இருந்து காஞ்சனாவின் குடும்பம் சென்னை திரும்பி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. அனைவருக்கும் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தது. சஞ்சீவிற்கு மட்டும் வாழ்க்கை தலைகீழாக மாறிப் போயிருந்தது. 

   

முன்பெல்லாம் இந்து எதிரில் வந்தால் அவளை பார்த்து மனதில் மகிழ்ச்சி அடைந்தாலும், நேரில் கண்டுக் கொள்ளாதது போல் சென்று விடுவான். அவளாக ஏதாவது பேசினாலும் முடிந்த அளவில் கோபத்தைக் காட்டுவான். 

   

இப்போது அவன் மனம் மாறி அவளுடன் இயல்பான வாழ்க்கையை வாழ விரும்பினாலும், அவள் அவன் அருகிலேயே வராமல் கண்ணாம்மூச்சி ஆடிக் கொண்டிருந்தாள். 

   

கோபப் பட்டால்

{/f90filter}

சமாதானப் படுத்தலாம், சந்தோஷப் பட்டால் மேலும் சந்தோஷப் பட வைக்கலாம்... இவளானால், அவன் சொல்வதற்கு எல்லாம் சரி என்றாள். ஆனால், முடிந்த அளவில் அவனை விட்டு விலகியே இருந்தாள்!!!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.