(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தவிர்த்திருப்பாள் ஆனால் ரஞ்சனியின் திருமணம் என்பதால் போகாமல் இருக்க அவளுக்கு மனம் வரவில்லை. 

   

மூவரும் காஞ்சனாவிடமும், கண்மணியிடமும் விடைப் பெற்று கிளம்பினார்கள்.

   

கீதாவிற்காக பின் சீட்டில் அமர்ந்த இந்துவை சஞ்சீவும் தடுக்கவில்லை. ஆனால் காரை கிளப்பும் முன் மறக்காமல் ரியர் வியூ கண்ணாடியை அவளை பார்க்கும் வண்ணம் மாற்றி வைத்துக் கொண்டான். ஏற்கனவே சஞ்சீவின் ‘ஆ’ லுக்கினால் முகத்தில் இருந்த கேலி புன்னகை பெரிதாக,

   

“நாம இன்னைக்கு முழுசா வந்து சேருவோமா?” என தோழியின் காதில் கிசுகிசுத்தாள் கீதா.

   

இந்து பதிலுக்கு சிரிக்க மட்டும் செய்தாள்.

   

ரஞ்சனியின் திருமணம் நல்ல முறையில் நடந்தது. மூன்றுப் பேரும் வரிசையில் நின்று ரஞ்சனிக்கு வாழ்த்து சொல்லி விட்டு, புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். அங்கே வந்திருந்த தன் கல்லூரி நண்பர்களையும், தோழிகளையும் இந்துவிற்கும் கீதாவிற்கும் அறிமுக செய்து வைத்த சஞ்சீவ், அவர்களிடம் பேச்சை தொடர்ந்தான். பழைய நட்புக்களை பேச விட்டு விட்டு, இந்துவும் கீதாவும் காலியாக இருந்த நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.

   

“இந்து, உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்...” என்றாள் கீதா. 

   

தயக்கத்துடன் ஒலித்த கீதாவின் குரலை கேட்டு ஆச்சர்யப் பட்டவளாக, “என்ன கீதா அக்கா என்ன விஷயம்? என் கிட்டே சொல்ல இவ்வளவு யோசிக்குறீங்க?” என்றாள் இந்து.

   

“அது... அது வந்து...”

   

சொல்ல வந்ததை சொல்லாமல் கீதா தடுமாறவும், இந்து அவளை கூர்ந்து நோக்கினாள். கீதாவின் முகத்தில் இருந்த மாற்றம் அப்போது

{/f90filter}

தான் அவளின் கவனத்திற்கு வந்தது. முன்பு ராஜீவின் மீதான காதலை இல்லவே இல்லை என்று எப்போதும் மறுத்து விட்டு, இறுதியில் ஒரு நாள் வெட்கத்துடன் காதலை உண்மை என்று ஒப்புக் கொண்ட கீதா இந்துவின் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.