(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

முன்பு அவள் அப்படி இருந்தது சரி, ஆனால், இப்போது அவன் மனதில் இருப்பதை சொன்ன பின்பும் அவள் இப்படி நடந்துக் கொள்வது அவனின் பொறுமையை சோதிப்பதாக இருந்தது. சில சமயங்களில் பொங்கி வந்த கோபத்தை அடக்க அவன் பெரும்பாடு பட வேண்டி இருந்தது. ஒரு வேளை பழி வாங்குகிறாளா என்று சந்தேகம் கூட அவனுக்கு தோன்றியது... ஆனால் இந்து முன்பும் இதே போல் தானே இருந்தாள் என அவனின் புத்தி எடுத்துரைத்தது. அவன் தான் அப்போதும் ஏன் அவள் அவனை நெருங்க முயற்சிக்காமல் இருக்கிறாள் என வருந்தினான். இந்து எப்போதும் அவனின் அண்ணி, அண்ணன், அம்மாவுடன் சிரித்து பேசி சந்தோஷமாக தான் இருக்கிறாள். கூடவே கண்மணியும் கலாவும் வேறு... ஊரில் இருந்த வரையில் வீணாவாவது அவனுக்கு உதவினாள். இப்போது அவளும் இல்லை... அண்ணியும் இப்போது இந்து பக்கம் போலும், ச்சே... அவனுக்கு கோபமாக வந்தது...

   

அன்று ரஞ்சனியின் திருமணம்! 

   

அவனுடன் கீதாவும், இந்துவும் வருவதாக திட்டம். திருமணம் முடிந்த பின் அவர்கள் இருவரையும் வீட்டில் விட்டு விட்டு அவன் அலுவலகம் செல்லலாம் என நினைத்திருந்தான். ஆனால் அவர்கள் இருவரும் கிளம்ப எடுத்துக் கொள்ளும் நேரத்தை பார்க்கும் போது, இன்று திருமணம் முடியும் முன் மண்டபத்திற்கு சென்று சேர்வோமா என்றே அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அவன் கிளம்பி தயாராகி கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகி இருந்தது!!!

   

பக்கத்தில் பேச்சு சத்தம் கேட்கவும், ஒருவழியாக கிளம்பி விட்டார்கள் போலும் என்ற எண்ணத்தோடு திரும்பி பார்த்தான்... பார்த்தவன் ஆச்சர்யத்தில் வாயை பிளந்தான்.

   

அன்றைய திருமணத்திற்கு என்று ஆரஞ்சு வண்ண பட்டு சேலை அணிந்திருந்தாள் இந்து. மற்ற நாட்கள் போல அல்லாமல் அன்று சிரத்தை எடுத்து அவள் அலங்கரித்துக் கொண்டிருப்பது சஞ்சீவிற்கே தெரிந்தது. 

   

சஞ்சீவின் பார்வையில் இயல்பாக முகம் சிவந்த இந்துவிற்கு, அவனை அப்படி வாய் பிளக்க செய்த தன் அழகின் மீது சற்றே கர்வமும

{/f90filter}் ஏற்பட்டது. சஞ்சீவுடன் தனியாக செல்வதை தவிர்க்க தான் கஷ்டப்பட்டு, கெஞ்சி கீதாவை துணைக்கு வரவழைத்திருந்தாள். வேறு யாருக்காவது திருமணம் என்றால் ஏதாவது காரணம் சொல்லி சஞ்சீவுடன் செல்லாமல் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.