தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 08 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ரயில் பிளாட்பார்மில் வந்து நிற்கவும் ஒவ்வொருவராக அதிலிருந்து இறங்க தொடங்கினார்கள்.
"நந்துவோடது ஏ.ஸி சேர் கார்... இந்த பக்கம் தான் இருக்கும்..." சொன்னபடி, இறங்கும் கூட்டத்தில் கண்களால் துளாவிய துளசி,
"அதோ அத்தை, அதோ இருக்கா நந்து!!!!" என்றாள்.
துளசியின் குரலில் இருந்த சந்தோஷமும் ஆர்ப்பரிப்பும் காமாட்சியின் முகத்திலும் புன்னகையை வரவைத்தது.
"வாங்க அத்தை, அவக் கிட்ட போவோம்... நாம வந்திருக்கது அவளுக்கு தெரியாது..." என்றபடி துளசி நடக்க, காமாட்சியும் அவளை பின்தொடர்ந்தாள்.
துளசி காட்டிய இடத்தில் இரண்டு பெண்கள் இருந்தனர். ஒருத்தி யாரையோ தேடுவதுப் போல் சுற்றி பார்க்க, மற்றவள் அவளிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
சேலை அணிந்து முகத்தில் சிறு புன்னகையுடன் பேசிக் கொண்டிருப்பவள் தான் நந்திதாவாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்த காமாட்சி, நடந்தப் படி அவளை கண்களால் எடைப் போட்டாள்.
சராசரி உயரத்தில், ஒல்லியாக, பார்வைக்கு குளிர்ச்சியாக தெரிந்தாள் அவள். அவள் பின்னி விட்டிருந்த கூந்தல் இடையை தாண்டி நீண்டிருந்தது.
"பரவாயில்லையே உன் ஃப்ரென்ட்க்கு இவ்வளவு நீளமான முடி இருக்கே," என காமாட்சி வியக்கவும்,
"நீளமான முடியா, யாரை சொல்றீங்க?? பக்கத்துல வந்துட்டோமே இருங்க..." என்ற துளசி, தோழியைப் பார்த்து,
"நந்து நந்து...." என்று சத்தமாக அழைத்தாள்.