திரும்பி பார்த்தது சேலையில் நின்றிருந்தவள் இல்லை! அவளின் அருகே இருந்த மற்றொருத்தி!
[ என்ன ஒரு ட்விஸ்ட்!!!! (ஹி ஹி ஹி!!!) ]
துளசி பக்கம் பார்த்தவளின் கண்கள் சந்தோஷத்தில் விரிந்தன!
"ஹாய் ஒசிமம்!!!!" என்று ஆர்பரித்தப்படி தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவளை மறந்து துளசியிடம் வந்து அவளை கட்டிக் கொண்டாள்!
இவள் தான் நந்திதாவா?
காமாட்சியின் கண்கள் இப்போது இவளை அளந்தன!
ஜீன்ஸ் பேன்ட்டும், சிம்பிளான காட்டன் டாப்ஸும அணிந்திருந்தாள் அவள். தலை முடியை அக்கறை இல்லாமல் கோதி விட்டிருந்தாள். ஆனாலும் அவள் அணிந்திருந்த குதிரை-வால் அவளுக்கு தனி அழகை தந்தது.
காதில் சின்னதாக முத்துக்கள்... கழுத்தில் எதுவும் இல்லை....
முகத்தில் பெரிய புன்னகை.... துளசியிடம் சந்தோஷமாக பேசியதில் அவளின் கண்களில் நட்சத்திரங்கள் மின்னி மறைந்தன...
இவளிடமும் எந்த குறையும் இல்லை என எண்ணும் போதே காமாட்சியின் மனதில் ரேவதியின் நினைவு வந்தது.
ரேவதிக்கு இந்த காலத்திலும் சேலையும், அழகாக பின்னிய ஜடையும் தான் அடக்கத்திற்கான அடையாளங்கள்!!!