(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

யோசனையுடனே மருமகளும் நந்திதாவும் பேசுவதை கவனித்தாள் காமாட்சி.

   

"ஏதாவது ப்ளாக் மேஜிக்கா ஒசிமம்??? அப்படியே இருக்க???"

   

"நந்து! நக்கல் தானே? உன்னை காலேஜ்ல பார்த்தபோது எப்படி இருந்தீயோ அப்படியே இருக்க. நீ என் கிட்ட சொல்ற?"

   

"சரி, சரி, இரண்டு பேருக்கும் இளமை ஊஞ்சலாடுது! வாங்க அந்த பக்கம் ஓரமாய் போய் நின்னு பேசலாம்," என்றாள் காமாட்சி.

   

நந்திதாவின் கவனம் காமாட்சியின் பக்கம் திரும்பியது.

   

"ஆன்ட்டி! உங்களை சந்திக்கனும்னு ரொம்ப நாளா ஆசை. இப்போ தான் கடைசியா வாய்ப்பு கிடைச்சது. எப்படி இருக்கீங்க?"

   

"நல்லா இருக்கேன்ம்மா... அதென்ன உனக்கு என்னை பார்க்கனும்னு ஆசை?"

   

"இதோ உங்க மருமகளால தான்! இவ என் கூட டெய்லி பத்து நிமிஷம் ஃபோன்ல பேசினா. அதுல எட்டு நிமிஷம் உங்களை பத்தின பேச்சு தான். மூணு வருஷத்துக்கு முன்னாடி, அத்தை எனக்கு தக்காளி தொக்கு செய்ய சொல்லி தந்தாங்கள்ள ஆரம்பிச்சு இப்போ அத்தை ஒரிகாமி சொல்லிக் கொடுக்குறாங்க வரைக்கும் வந்திருக்கு..."

   

"ஓஹோ!!! ஆனால் அது என்ன எட்டு நிமிஷம்? மீதி இரண்டு நிமிஷம் என்ன செய்வீங்க?"

   

"ஒரு நிமிஷம் என்னைப் பத்தி கேட்பா, மீதி இருக்க ஒரு நிமிஷம் இந்த சாஹித்யா குட்டிக்கு! ஆனால் ஆன்ட்டி இவ சரத்தை லவ் செய்த காலத்துல கூட இப்படி அவர் புராணம் பாடினது இல்லை. மூணு வருஷமா எப்போதும் உங்களை பத்தின பேச்சு தான்..."

   

"நந்து, அவங்க யாரு உன் ஃப்ரென்டா? உனக்காக பார்த்துட்டு இருக்காங்க போல, பேசிட்டு வா, நாம கிளம்புவோம். போற வழியில பேசுவோம்..." என்றாள் துளசி சற்று தள்ளி நின்றிருந்த 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.