"அவர். 'நான் உன்னை நனைச்சேன், நீ என்னை நனைச்சேன்னு...' பாடுவார்..."
"ஹா ஹா ஹா..." காமாட்சி மட்டுமில்லாமல், ராஜசேகரும் இப்போது சிரித்தார்.
"அம்மா தாயே, எங்களை விட்டுடு..." என்றான் சரத்.
"இன்னும் எத்தனை கடி ஜோக் ஸ்டாக்ல வச்சிருக்க?" என ராஜசேகர் வினவினார்.
"நிறைய இருக்கு அங்கிள்.... கொஞ்சம் கொஞ்சமா அவிழ்த்து விடுவேன்..... கேட்டு ரசியுங்க..."
"இனிமேல் சாப்பிட வரும் போது காதுல இரண்டு பஞ்சு வச்சுட்டு தான் வரணும் போல இருக்கு," என்று சரத் சொல்லவும்,
"இன்னும் ஒரு வாரத்துக்கு தானே சரத், அப்புறம் நான் ஹாஸ்டல் போயிடுவேன், நீங்க கேட்டாலும் நோ கடி ஜோக்ஸ்," என்றாள் நந்திதா இலகுவாக!
அவள் சொன்னதைக் கேட்டு, ராஜசேகர் கேள்வியாக மனைவியை பார்த்தார். அதன் பொருள் உணர்ந்துக் கொண்டு தலை அசைத்து பதில் சொன்னாள் காமாட்சி.
❀✿❀✿❀✿
சாப்பிட்டு முடித்து சரத்தும் ராஜசேகரும் சென்றப் பிறகு, "எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நந்து, நீ தூங்கு, நாளைக்கு நீ வேலைக்கு வேற போகனும்... சீக்கிரமா தூங்குறது நல்லது," என்றாள் துளசி
"ஹேய் எனக்கு ட்ரஸ் செலக்ட் செய்ய ஹெல்ப் செய்றேன்னு சொன்னீயே?" என்றாள் நந்திதா சிணுங்கலாக!
"என்னை கேட்டா அந்த சாரீ தான் கட்ட சொல்லுவேன். நீ தான் கேட்க மாட்டேங்குறீயே?"