"என்ன அண்ணி தெரியாத மாதிரி கேட்குறீங்க?"
"அம்மாடியோ! உங்க இரண்டு பேரையும் மேனேஜ் செய்றது ரொம்ப கஷ்டமா இருக்கே!"
"சும்மா சொல்லாதீங்க அண்ணி! உங்க ஃப்ரென்ட் ரொம்ப சாஃப்ட் டைப்!"
"ஆமாங்க சார்... சரி நீ எதுக்கு அத்தனை தடவை ஃபோன் செய்த அதை சொல்லு"
"அவங்க நாளைக்கு எந்த கலர் சாரீ கட்டிட்டு வராங்க?"
அவன் கேட்ட விதத்தில் துளசிக்கு சிரிப்பு வந்தது.
"உங்க அவங்க, ஸ்கை ப்ளூ கலர் சாரீல வராங்க..."
"வாவ் சூப்பர்! நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம், காரணம் ஏன் கண்ணே...."
"டேய் வைடா ஃபோனை...."
"ஹி ஹி ஹி... குட் நைட் அண்ணி...!"
❀✿❀✿❀✿
"எப்படி இருக்கேன் ஆன்ட்டி?"
சேலையில் வந்து நின்றுக் கேட்ட நந்திதாவை பார்த்து காமாட்சியே அசந்துப் போனாள்!
"அம்மாடியோ, இது நேத்து பார்த்த அதே நந்திதா தானா? ஆளே மாறிப் போயிட்ட! நீ தடுக்கி விழுறீயோ இல்லையோ, இன்னைக்கு உன்னை பார்த்து நிறைய பேர் மயங்கி விழ போறாங்க..."