"ஏன் கேட்க மாட்டா? நான் சொன்னா நந்து கேட்பா! முதல் நாள் போற, புடவை கட்டிட்டு போ நந்து. அப்போ தான் உன்னோட உண்மை சொரூபம் தெரியாமல் உன் ஆஃபிஸ்காரங்களை ஏமாத்த முடியும்," என்றாள் காமாட்சி.
"ஆன்ட்டி!!! எனக்கு சாரீ கட்ட தெரியாது!"
"இதென்ன பிரமாதம், துளசி உதவி செய்வா... அரை மணி நேரம் போதும்! என்ன துளசி?"
"அவ சரின்னு சொன்னால், எனக்கென்ன பிரச்சனை இருக்கு அத்தை?"
"ப்ச்... ஆன்ட்டி, உங்களுக்காக தான் சாரீ கட்டுறேன்... நாளைக்கு எங்கேயாவது நான் தடுக்கி விழுந்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனா நீங்க தான் காசு கட்டனும்!"
"அதெல்லாம் பார்த்துக்கலாம் நந்து! இருக்கவே இருக்கு கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டல்!"
"அம்மாடியோ, என்ன தாராள மனசு..."
"நந்து, பேசினது போதும் போய் தூங்கு! அத்தையும் நேரத்துக்கு தூங்கனும். நீ பேசிட்டே இருந்தா அவங்களும் முழிச்சே இருப்பாங்க..."
"நீ ஹாஸ்டல் வார்டனா போயிருக்க வேண்டியவ ஒசிமம்... சரி ஆன்ட்டி குட்நைட்!!!" என்றபடி தன் அறைக்கு சென்றாள் நந்திதா.
காமாட்சியும் தூங்க போவதாக சொல்லி செல்ல, துளசி, தன்னுடைய மொபைலை எடுத்தாள். உதயிடம் இருந்து ஐந்து மிஸ்ட் கால்கள் வந்திருந்தன.
அவனின் எண்ணிற்கு அழைத்தவள், அவன் உடனே எடுக்கவும்,
"என்ன நினைச்சிட்டு இருக்க நீ மனசுல?" என்றாள் கோபமாக.