தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 17 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
நந்திதா தன் ப்ராஜக்ட்டான அந்த இயந்திர மனிதனின் மூளை சர்க்யுட்டை (circuit) சரியாக பொறுத்தி, டெஸ்ட் செய்து விட்டு, கவனமாக பேக் (pack) செய்து பொருட்காட்சி நடக்கும் இடத்திற்கு அனுப்பி இருந்தாள்.
நாகு வந்த உடன் அதை திறந்து ஒரு முறை சரி பார்க்க வேண்டியது மட்டும் தான் பாக்கி...
மனதினுள் ஆர்வமும், டென்ஷனும் சமவிகிதத்தில் ஏற நாகுவிற்காக காத்திருந்தாள் நந்திதா.
சில நிமிடங்களில், “சாரி நந்திதா, ரொம்ப நேரம் வெயிட் செய்ய வச்சுட்டேனா?” என்ற கேள்வியைக் கேட்டபடியே அவளின் அருகில் வந்தாள் நாகு.
“இல்ல நாகு! நான் தான் சீக்கிரம் வந்துட்டேன். ரொம்ப டென்ஷனா இருக்கு,” என்றாள் நந்திதா.
“ரிலாக்ஸ்ப்பா... எல்லாம் நல்லா போகும்... எதுக்கும் நாம ஒரு தடவை செக் செய்திருவோம்... உதய் இன்னும் கொஞ்சம் நேரத்துல வருவார், அவர் வந்த பிறகு அவருக்கு ஒரு டெமோ காட்டுவோம்...”
“உதய் வருவாரா?”
நாகு நந்திதாவை விசித்திரமாக பார்த்தாள்.
“இதென்ன கேள்வி நந்திதா? நம்ம கம்பெனிக்கே இது ரொம்ப முக்கியமான நாள் ஆச்சே... அவர் எப்படி வராமல் இருப்பார்? இந்த ஆர்&டி முழுக்க முழுக்க அவரோட ஐடியா தான்... இது அந்த டிபார்ட்மென்ட்ல இருந்து வர முதல் டிசைன்...”
“ஓ!!!! ஆமாம்...”
உதய் வர போகிறான் எனும் செய்தி ‘ஏதோ’ விதத்தில் நந்திதாவின் மனதிற்கு இதமாக இருந்தது!!!