(Reading time: 6 - 12 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 03 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

கமல் எதற்காக தனி வீடு, பெரிய வீடு என்றெல்லாம் பேசுகிறான் என்பது சுமித்ராவிற்கு தெரியும்! ஒரு காலத்தில் அவளின் மனதில் இருந்த ஆசை அது... ஆனால் இப்போது அது எதுவும் அவளுக்கு முக்கியமாக தெரியவில்லை. அவள் விரும்பியது எல்லாம் கமலின் அன்பும் அருகாமையும் மட்டும் தான்!

   

“ஹையோ ஹையோ... லூசு கமல்!!!”

   

“ஹேய் சுமி!”

   

“பின்னே வேற என்ன சொல்ல? உங்க கூட இருக்க எப்போவுமே நான் சந்தோஷமா தான் இருப்பேன்... இருக்கேன்... அதுக்காக நீங்க தனியா வேற எதுவுமே செய்ய வேண்டாம்...”

   

“நீ இப்படி சொன்னா நான் செய்யாம விட்டுடுவேனா, செய்வேன்...”

   

“இங்கே பாருங்க, கவிதாக்கு காலேஜ் முடிஞ்சு வேலை உடனே கிடைச்சுட்டா கூட, ஒன்னு இரண்டு வருஷத்துல கல்யாணம் பார்க்கனும்...”

   

“அது தெரியுமே...”

   

“இருங்க இருங்க... அப்போ இப்போ இருந்து மூணு நாலு வருஷம்னா, நம்ம குட்டி பாப்பா ரேஷ்மிக்கு ஒன்பது, பத்து வயசாகிடும்.... அவளுடைய எதிர்காலத்தை பத்தி யோசிக்க வேண்டாமா? அதுக்கு சேமிக்க வேண்டாமா?”

   

“ஓ!!!! என்ன கொடுமை சுமி இது!!! எப்போ தான் நாம நமக்குன்னு வாழுறது....?”

   

“இப்போ மட்டும் வேற எப்படி வாழுறோம் கமல்? நமக்காக தானே? நான் ஏன் அத்தை மாமா, கவிதா, விமல்ன்னு எல்லோர் கிட்டேயும் அனுசரணையா இருக்கேன்? உங்களுக்காக தான்....! நீங்களும் கூட எல்லாத்திலேயும் என்னை பத்தியும் யோசிக்குறீங்க தானே?”

   

“ம்ம்ம்....”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.