(Reading time: 6 - 12 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

டைம்ல காதல்ல விழுறவங்க, அங்கே இருக்க டாக்டரை லவ் செய்வாங்க இல்லன்னா நர்ஸை லவ் செய்வாங்க, நீங்க மட்டும் தான் டாக்டரோட ஃப்ரென்டை லவ் செயதீங்களாம்...”

   

புன்னகையோடே சொல்ல தொடங்கி இருந்தாலும், இப்போது சுமித்ராவின் முகம் பழைய நினைவுகளில் பளிச்சிட்டு மின்னியது...!

   

அதை ரசித்தப் படி,

   

“அவங்க தான் நம்மளை கனக்ட் செய்த லிங்க்ன்னு சொல்ல வேண்டியது தானே?” என்றான் கமல்.

   

“ஹுஹும்... அவ உதைப்பா.... குழந்தை பிறக்குற வரைக்கும் அவ என்ன வேணா சொல்லட்டும் அப்புறம் அவளை கவனிச்சுக்கலாம்...”

   

“அப்போ சரி...! ஏன் சுமி, டாக்டருக்கும் உன் வயசு தானே ஆகுது?”

   

“ஆமாம்... ஏன்?”

   

“இல்ல... லேட்டா குழந்தை பெத்துக்குறாங்களே...”

   

“அவ படிச்சு முடிச்சு, கிளினிக் போட்டு செட்டில் ஆகி அப்புறமா கல்யாணம் செய்துக்கிட்டா.... நான் அப்படி இல்லையே...”

   

“அது பரவாயில்லை சுமி... அது நமக்கு தேவையும் இல்லை...”

   

“ஏன் தேவை இல்லை? நான் வேலைக்கு போனா உங்களுக்கு உதவியா இருக்கும்ல?”

   

“இல்லைடா, நீ இப்போ அம்மாக்கு ஒரு ஃப்ரென்டா, என் தங்கைக்கு ஒரு கைடா, தம்பி, தம்பி வைஃப்புக்கு ஒரு சப்போர்ட்டரா, நம்ம ரேஷ்மிக்கு நல்ல அம்மாவா இருக்க பாரு அதுவே போதும்...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.