(Reading time: 6 - 12 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

   

“அதை விட வேறென்ன வேணும்? இப்படி நமக்குள்ளே ஸ்டெடியான அன்பு இருக்கு, அன்டர்ஸ்டான்டிங் இருக்கு... அதுவே போதும்....”

   

“ஏன் சுமி இன்னைக்கு உன் டாக்டர் ஃப்ரென்ட் ஹேமா வந்திருந்தாங்களா?”

   

அவனின் கேசத்தில் விரல்களை விடுவதும், எடுப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்த சுமித்ரா, அதை நிறுத்தி விட்டு, கணவனை ஆச்சர்யமாகப் பார்த்தவள்.

   

“ஆமாம் வந்திருந்தா... உங்களுக்கு எப்படி தெரியும்?”

   

“எல்லாம் உன் பேச்சை வச்சு தான்... அவங்க வர அன்னைக்கு எல்லாம் தான் நீ இப்படி டச்சிங், டச்சிங்கா பேசுவ.... ரொமான்டிக் லுக் எல்லாம் விடுவ...”

   

“இதெல்லாம் ஓவர்...” என்று சொன்னாலும் சுமியின் இதழோரம் புன்னகை பூக்கவே செய்தது.

   

“என்ன சொன்னாங்க அவங்க?”

   

“வேற என்ன, அத்தை கிட்ட செல்லம் கொஞ்சினா... அவங்களும் அவளை விழுந்து விழுந்து கவனிச்சாங்க... ப்ரேக்னன்ட்டா இருக்காளேன்னு அவளுக்கு ஸ்பெஷலா குழம்பு எல்லாம் செய்து தந்தாங்க...”

   

“அப்புறம்?”

   

“அப்புறம் என்ன? அவ்வளவு தான்... கொஞ்ச நேரம் இருந்துட்டு கிளம்பிட்டா...”

   

“ஹேய்... அவங்களும் நீயும் பேசவே இல்லையா??? உன்னை அவங்க ஒன்னும் சொல்லவே இல்லையா???”

   

“ப்ச்... அதுவா? அது ஆஸ் யூஷுவல்... ஹாஸ்பிட்டல்ல யாராவது அட்மிட் ஆகி இருக்க 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.