(Reading time: 6 - 11 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

நந்திதா.

   

பதற்றமடையாமல் அவளை கனிவுடன் பார்த்த உதய், “நந்திதா, ரிலாக்ஸ்! முதல்ல டென்ஷன் ஆகாதீங்க,” என்றான் அமைதியாக.

   

“எப்படி டென்ஷன் ஆகாம இருக்க முடியும் உதய்? இது என்னோட எத்தனை நாள் உழைப்பு தெரியுமா?”

   

“யெஸ், ஐ நோ! இப்போதும் ஒன்னும் கெட்டுப் போகலை... டிஸ்கனக்ட் ஆகி தானே இருக்கு, சரி செய்ய பார்ப்போம்... நீங்க தான் இந்த பிராஜக்டோட மூளை! நீங்க டென்ஷன் ஆகி, ஸ்டன் ஆகி நின்னா எதுவுமே செய்ய முடியாது... ஃபர்ஸ்ட் கொஞ்சம் ஆழ்ந்த மூச்சு விடுங்க... ரிலாக்ஸ் ஆகுங்க...”

   

நந்திதா உதயை வருத்தத்துடன் பார்த்தாள் ஆனாலும் அவன் சொன்னதை செய்தாள்...

   

அதை செய்ததால் என்றில்லாமல், உதய் சொன்னதை கேட்டே அவளுள் இருந்த அதிர்ச்சியும், டென்ஷனும் குறைந்து தான் போயிருந்தன...!

   

உதய் அந்த சர்க்யூட் இருந்த சிறு பெட்டியை எடுத்து ஆராய்ந்தான். நந்திதா அவளின் அழகான குண்டு கையெழுத்தில் “Fragile handle with care” என்று குறிப்பு எழுதி இருந்தாள்.

   

“எக்ஸிபிஷன் ஸ்டார்ட் ஆக போகுது, ஆனால் நாம இம்ப்ரஸ் செய்ய விரும்புற அமெரிக்கன் டெலிகேட்ஸ் பன்னிரண்டு மணி போல தான் வருவாங்க... ஸோ, நமக்கு இன்னும் மூணரை மணி நேரம் இருக்கு...”

   

“அதுக்குள்ளே இதை எல்லாம் சரி செய்து டெஸ்ட் செய்து வேற பார்க்கனுமே...!” நாகு கேள்வியுடன் நந்திதாவை பார்த்தாள்.

   

“லெட்ஸ் ட்ரை அவர் பெஸ்ட்... நந்திதா இந்த சர்க்யூட், கோட் டீடெயில்ஸ் உங்க கிட்ட இருக்கா?”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.