(Reading time: 7 - 14 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

"என்ன அத்தை, கண்ணை திறந்துட்டே தூங்குறீங்க???"

   

யோசனையில் இருந்து வெளியே வந்த பூங்கோதை, பதில் சொல்லாமல் மருமகளின் கன்னத்தை வருடினாள்.

   

"ஹைய்யோ அம்மா... போதும் போதும் செல்லம் கொஞ்சினது..." என்றாள் கவிதா.

   

"நீ சும்மா இருடி... ஏன் சுமி, கவி சொன்னது போல சும்மா இருக்க வேண்டியது தானே? உனக்கு ஏன் வேலையை எடுத்துக்குற வேலை???"

   

"எல்லாம் உங்களுக்காக தான் அத்தை... விமலை பார்க்காம உங்களால இருக்க முடியாதுன்னு எனக்கு நல்லா தெரியும்... இது என்ன, வெறும் கால் மணி நேர வேலை தானே... விடுங்க அத்தை," என்றாள் சுமித்ரா இலகுவாக!

   

பூங்கோதையும், கவிதாவும் அவளை அதிசயப் பொருளை பார்ப்பது போல பார்த்தார்கள்.

   

❀✿❀✿❀✿

   

“கவிதாவோட ஃப்ரென்ட்ஸ் எல்லோரும் ஒரே மாதிரி ட்ரஸ் செலக்ட் செய்து எடுக்கப் போறாங்களாம்... வாங்க பணம் வேணும்னு சொன்னா... அதைப் பத்தி அவ இன்னைக்கு ஹிட்லர் கிட்ட பேசுவான்னு தான் நினைக்கிறேன்... அதுக்கு என்ன எல்லாம் சொல்லப் போறானோ தெரியலை...” என பூங்கோதை நான் ஸ்டாப்பாக புலம்பிக் கொண்டிருக்கவும், அவளின் பக்கத்தில் இருந்த சுமித்ராவிற்கு என்னவோ போல இருந்தது.

   

“அவர் சும்மா எல்லாம் திட்ட மாட்டார் அத்தை!”

   

“நீயும் அவனுக்காக விடாம எப்போவும் சப்போர்ட்க்கு வர... அவனோட சிடுசிடு குணத்துக்கு இப்படி சப்போர்ட் செய்ற மனைவி கிடைச்சது அதிசயம் தான்!”

   

“கவிதா கஷ்டம் தெரிஞ்சு நடந்துக்க தானே அவர் சொல்றார் அத்தை???”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.