தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 18 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
உதய் எதிர்பார்த்து காத்திருந்த அந்த அமெரிக்க நிறுவனத்தின் நிர்வாகிகள் அவர்களின் ஸ்டாலின் அருகே வந்திருந்தார்கள். உதய் வேகமாக அவர்களிடம் சென்றான்.
“ஹலோ க்றிஸ்!”
“ஹலோ மிஸ்டர் உதய்! டெமோ வொர்க் ஆகலைன்னு சொல்றாங்களே, இஸ் இட் ட்ரூ? அது மட்டும் நிஜம்னா ஐ வில் பீ வெரி டிஸ்ஸபாயின்டட்,” என்றார் அந்த க்றிஸ்!
“இவ்வளவு நேரம் யாருக்கும் டெமோ கொடுக்கலை க்றிஸ். உங்களுக்காக காத்திருந்தோம்! நீங்க எங்க ஸ்பெஷல் டெலிகேட்ஸ் ஆச்சே!”
“ரியல்லி, அப்போ டெமோவை பார்ப்போமா?”
“ஷுயர், ஸ்டால் உள்ளே வாங்க...”
உதயும் க்றிஸும் ஸ்டால் நோக்கி நடக்க, க்றிஸுடன் வந்திருந்த மேலும் மூன்றுப் பேரும் அவர்களை பின் தொடர்ந்து சென்றார்கள்.
உதய் ஸ்டாலில் இருந்த பெண்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான். “இவங்க மிசர்ஸ் நாகலட்சுமி, எங்க ப்ரொடக்ஷன் ஹெட்... இவங்க மிஸ் நந்திதா, இந்த ப்ராஜக்ட்டின் மூளை!”
கைகுலுக்கி அவர்களை வரவேற்றனர் இரு பெண்களும்...
நந்திதாவின் கண்கள் அவளையும் அறியாமல் உதயிடம் சென்றது...
அவளுக்கு நம்பிக்கை ஊட்ட என்று உதய் செய்ததற்கு அவள் அப்படி கையை இழுத்துக் கொண்டது எத்தனை நாகரிகமில்லாத செயல் என்பது அவளுக்கு புரிந்தது... இப்போது யாரோ அந்நியர்களிடம் தயக்கமில்லாமல் கை குலுக்கும் போது உதய் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டானா?