பேச்சை நிறுத்தி விட்டு, “சொல்லுங்க நந்திதா...” என்றான் உதய்.
“உங்க அண்ணி துளசி உங்க கிட்ட பேசனுமாம்...” என சொல்லி ஃபோனை அவள் நீட்ட,
“ஓ, கொடுங்க...” என்று சொல்லி மொபைலை கையில் வாங்கிய உதய், “பை தி வே நந்திதா, ப்ரொடக்ஷன் ப்ளான் செய்றது பத்தி தான் பேசிட்டு இருந்தோம். நாகுக்கு வேண்டிய டீடெயில்ஸ் கொடுங்களேன்.... நாம க்றிஸ் & டீமை திரும்ப மீட் செய்யும் போது டிஸ்கஸ் செய்ய வசதியா இருக்கும்,” என்றான்.
“ஓகே உதய்...” என்ற நந்திதா நாகுவிடம் பேச தொடங்க, உதய் ஃபோனுடன் அவர்களை விட்டு சற்று தள்ளி வந்தான்...
“சொல்லுங்க அண்ணி...”
“என்ன ஹீரோ சார்! உங்க காட்டுல இன்னைக்கு மழை போல இருக்கு?”
“ஹி ஹி ஹி! மூணு மாசமாவே மழை தானே அண்ணி...”
“சைட் அடிச்சு அடிச்சு கண்ணெல்லாம் வலிச்சிருக்கனுமே???”
“இல்ல இல்ல... பார்த்து பார்த்து தீர மாட்டேங்குது... பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு...”
“இருக்கும் இருக்கும்... பாருங்க பாருங்க... மேடம் அப்படியே உங்க சார்ம்ல மயங்கி போய் இருக்காங்க... அப்பப்போ உதய் புராணம் தான்...”
“ஹி ஹி ஹி... ரொம்ப புகழாதீங்க அண்ணி...”
“சரி, இன்னைக்கு என்ன ப்ளான்?”
“எந்த ப்ளான்?”