“ரொம்ப நல்லா போச்சுப்பா... சின்ன பிரச்சனை பட் எப்படியோ ஃபிக்ஸ் செய்துட்டோம்...”
“என்ன இவ்வளவு அமைதியா பேசுற? உதய் பக்கத்தில் இருக்கானா?”
“ம்ம்ம்...”
“அவ்வளவு நல்ல பொண்ணா நந்து நீ? காலேஜ் படிச்சப்போ ஒரு ப்ரோபசர், லெக்சரர்க்கு இந்த அளவுக்கு மரியாதை கொடுத்திருப்பீயா?”
“உன்னை அப்புறம் கவனிச்சுக்குறேன்... இரு...”
“அதெல்லாம் இருக்கட்டும், இன்னைக்கு டின்னர் வீட்டிலேயா வெளியேவா?”
“வெளியே தான்னு நினைக்கிறேன்ப்பா... நாகு அப்படி தான் சொன்னாங்க...”
“அப்புறம் அங்கே இருந்து எப்படி வீட்டுக்கு வருவ? நைட் ஆகிடும், மழை டைம் வேற...”
“நான் ஆட்டோ பிடிச்சு வந்திருவேன், கவலைப்படாதே...”
“அதெப்படி கவலைபடாமல் இருக்க முடியும்? நீ ஃபோனை உதய் கிட்ட கொடு...”
“ஹேய் ஒசிமம், எதையாவது சொல்லி வைக்காதே...”
“நீ பந்தா செய்யாம ஃபோனை அவன் கிட்ட கொடு...”
“ம்ம்ம்... சரி...”
நாகுவிடம் மும்முரமாக பேசிக் கொண்டிருந்த உதயின் அருகே சென்று, “எக்ஸ்க்யூஸ் மீ உதய்,” என்றாள் நந்திதா.