அப்படி எதுவும் அவன் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை தெரிவிப்பதை போல் வழக்கமான புன்சிரிப்புடன் நின்றிருந்தான் உதய்!
அடுத்த நாற்பத்தி ஐந்து நிமிடங்கள், நந்திதா வடிவமைத்திருந்த இயந்திர மனிதனின் மூளை செய்த சாகசங்களை கண்டு வியப்பதில் கழிந்தது...
பேசினால் பதில் சொல்ல தெரிந்த அந்த ‘மூளைக்கு’, தன் முதலாளி யார், மற்றவர் யார் என்ற வேறுபாடையும் தெரிந்துக் கொள்ள முடிந்தது. சொல்லும் வேலையை மற்ற பாகங்களுக்கு விரைவாக கட்டளை அனுப்பவும் அதற்கு தெரிந்தது...
“அமேஸிங்! இதை எப்படி இவ்வளவு ஃபாஸ்டா டிசைன் செய்ய முடிஞ்சது மிஸ் நந்திதா?” என வியப்புடன் வினவினார் க்றிஸ்.
“ஃபாஸ்டா செய்யலை மிஸ்டர் க்றிஸ், இது நான் காலேஜ் படிக்கும் போதே என் மனசுல இருந்த ஒரு ஐடியா... அப்புறம் நான் வேலை செய்த கம்பெனிஸ்ல இதை எல்லாம் எடுத்து செய்ய சுதந்திரம் இல்லை... இங்கே நதி சொல்யுஷன்ல மிஸ்டர் உதய் கொடுத்திருக்க சுதந்திரம், அப்புறம் நாகுவின் கைடன்ஸ் எல்லாம் தான் இதை நிஜமாக்க உதவி செய்தது,” என்றாள் நந்திதா.
“எக்ஸலன்ட் ஜாப் யங் வுமன்! மிஸ்டர் உதய், உங்க டீம், உங்க லீடர்ஷிப், உங்க கம்பெனி எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... இந்த ட்ரிப்லேயே நாம அக்ரீமன்ட் போட்டுப்போம்... ப்ரொடக்ஷன் உங்களால எப்போ ஸ்டார்ட் செய்ய முடியும்னு சொல்லுங்க, அதுக்கு ஏத்த மாதிரி ப்ளான் செய்துப்போம்... எங்க கம்பெனியோட ஆட்டோமோட்டிவ் டிவிஷன்ல் இருக்க ரோபோட்ஸ்க்கு இந்த ப்ரெயின் அப்க்ரேட் செய்தால் எங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்...”
முகம் மலர, “ஷுயர் க்றிஸ், இரண்டு நாள்ல ப்ளான் சார்ட் அவுட் செய்திடலாம்... பட், நீங்க இவ்வளவு அவசரமா முடிவெடுக்கனும்னு இல்லை, பொறுமையா கூட எடுக்கலாம்...” என்றான் உதய்.