(Reading time: 7 - 14 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

“நோ உதய், நானும் உங்களை போலவே தான்... திறமையும் வேல்யூவும் எங்கே இருக்கோ அது தான் எனக்கு ஃபர்ஸ்ட், மத்ததெல்லாமே செகன்டரி...”

   

க்றிஸுடன் பேசியபடி உதயும் மற்றவர்களும் நகர்ந்து செல்ல, நாகுவும் நந்திதாவும் சந்தோஷத்துடன் கை குலுக்கி கொண்டார்கள்.

   

“கிரேட் ஜாப் நந்திதா! கலக்கிட்ட போ!”

   

“தேங்க்ஸ் நாகு...”

   

அப்போது அங்கே வந்த உதயும் அவர்களின் சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொண்டான்.

   

“வீ டிட் இட் கய்ஸ்!”

   

சந்தோஷத்துடன் நாகுவின் கையை பற்றிக் குலுக்கிய உதய், நந்திதா பக்கம் புன்னகை மட்டும் சிந்தி விட்டு அவளின் அந்த இயந்திர மூளையை பற்றி பேச தொடங்கினான்...

   

நந்திதாவிற்கு ‘சுருக்கென்று’ மனதினுள் தைத்தது!

   

❀✿❀✿❀✿

   

நேரம் மாலை ஐந்தை நெருங்கிய போது துளசி நந்திதாவை ஃபோனில் அழைத்தாள்.

   

அழைப்பை ஏற்று ரகசியக் குரலில், “துளசி, நான் அப்புறம் பேசுறேன்...” என்றாள் நந்திதா அவசரமாக.

   

“ஹேய், என்ன அப்படி என்கிட்டே பேச முடியாத சிச்சுவேஷன்??? எப்படி போச்சு உன் டெமோ?”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.