“எக்ஸிபிஷன் அஞ்சரை மணிக்கு முடிஞ்சிருமே அப்புறம் என்ன ப்ளான்?”
“என்ன ப்ளான் செய்றது அண்ணி? எக்ஸ்ட்ராவா ஒரு செகன்ட் பார்த்தாலே முறைக்குறாங்க மேடம்...”
“அட லூசே, இப்படி இருந்தா முறைக்காம வேற என்ன செய்வா? அவங்க ரெண்டுப் பேரும் டின்னர் போகலாம்னு ப்ளான் வச்சிருக்காங்க, நீ நடுவுல புகுந்து அவங்களை அழைச்சிட்டுப் போ...”
“ம்ம்ம்... ஓகே...”
“எப்படியும் நீங்க சாப்பிட்டு முடிக்க எட்டு மணிக்கு மேல ஆகிடும், இரண்டு பேரையும் நீயே ட்ராப் செய்றேன்னு சொல்லு...”
“ரெண்டுப் பேரையுமா?”
“பின்ன உன் நந்திதாவை மட்டும் பார்த்தா, கூட வராங்களே அவங்களை என்ன செய்றது?”
“ஓ... ஓகே...”
“முதல்ல நாகுவை ட்ராப் செய்...”
“யெஸ், அப்போ தான் நதி கூட நான் கொஞ்ச நேரமாவது தனியா பேச முடியும்...”
“பரவாயில்லை, இவ்வளவு தெரியுதே உனக்கு! பேசுறேன்னு தப்பி தவறி அசடு வழிஞ்சு வச்சிடாதே... அவ உன் மேல ரொம்ப பெரிய இம்ப்ரெஷன் வச்சிருக்கா...”
“ம்ம்ம்....”