“சொன்னா பரவாயில்லையே சுமி! அவன் எதுகெடுத்தாலும் கோபப்படுறான், கத்துறான்... அப்புறம் எப்படி கவிதாக்கு புரியும்? எனக்கே பிடிக்கலை...”
‘எல்லாவற்றிருக்கும் காரணம் நீயும் உன் கணவனும் தான்’ என சுள்ளென்று பதில் சொல்ல நினைத்த சுமித்ரா, பூங்கோதையின் அன்பு நிறைந்த அமைதியான முகத்தைப் பார்த்து நாக்கை கடித்துக் கொண்டு அமைதியாகிப் போனாள்!
அவள் நிதானம் இழப்பதால் எதுவும் மாறி விடப் போவதில்லை!
அவளுக்கு மட்டும் தான் கமலின் மென்மையான முகம் தெரியும்... கமலுக்கும் அவனின் குடும்பத்தினருக்கும் இடையே இருந்த இடைவெளியை இணைக்கும் பாலம் போல தான் அவள் இருந்தாள்...
கமலிற்கு வெளிப்படையாக பாசத்தை காட்ட தெரியாவிட்டாலும் தம்பி, தங்கை, அம்மா, அப்பா என அனைவரின் மீதும் அதிக அன்பு உண்டு என்பதும் சுமித்ராவிற்கு தெரியும்...
இப்படி பாசத்தை ஒளித்து வைக்காமல் வெளிப்படுத்த அவளும் அவனிடம் எத்தனையோ முறை சொல்லி விட்டாள்... ஹுஹும்... ஒரு மாற்றமும் இல்லை... ரிசல்ட் இப்போதும் ஜீரோவிலேயே இருந்தது...
அதுமட்டுமல்லாமல் பூங்கோதையும், கவிதாவும் அவள் மீது அதிக அன்பு வைத்திருந்தார்கள். விமலும் அவளிடம் அதிக மரியாதை கொண்டிருந்தான். கமலிற்கு சப்போர்ட் செய்கிறேன் என்று அவர்கள் மனதை நோகடிப்பது சரி இல்லை...
எப்படியாவது கணவனை மென்மையான முகத்தை இவர்கள் அனைவரும் புரிந்துக் கொள்ள செய்ய வேண்டும்...
மனதில் ஓடிய யோசனையுடனே மாலை நேர சிற்றுண்டியை தயாரித்துக் கொண்டிருந்த சுமித்ரா, திடீரென்று வயிற்றில் ஏற்பட்ட கூரான வலியினால் தாக்கப்பட்டு ‘ஃபிரீஸ்’ ஆகி