(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

   

இரண்டு வாரம் தான் ஆகிறதா??? சுமித்ரா அவசரமாக யோசித்து நினைவில் கொண்டு வர முயன்றாள்... தெளிவாக நினைவுக்கு வரவில்லை...

   

மற்றபடியும் இர்ரெகுலர் பீரியட்ஸ் என்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே... பொறுமையாக யோசித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அந்த யோசனையை கை விட்டாள்...

   

அருகே இருந்த கணவனை பார்த்தவளின் கண்கள் தானாக குறும்புடன் ஜொலித்தது!

   

“நீங்க ஒரு சூப்பர் அமுல் பேபி கமல்... கன்னம் எல்லாம் புஸ் புஸ்ஸுன்னு இருக்கு....” என்றாள் கிண்டலாக!

   

“ஹேய்...”

   

“உங்க பாட்டி சின்ன வயசுல உங்களுக்கு என்ன ஸ்பெஷலா கொடுத்தாங்க?”

   

“ஹ்ம்ம்... நாலு அடி கொடுத்தாங்க... உனக்கு வாய் அதிகமாயிடுச்சு...”

   

“ஆமாம் ஆச்சு, இப்போ என்ன?”

   

“ஒன்னுமே இல்லை...”

   

“குட்... ஆனா இவ்வளவு பேசின உங்களுக்கு ஏதாவது பனிஷ்மென்ட் தரனுமே...”

   

“எனக்கா??”

   

“ஆமாம் உங்களுக்கு தான்... இவ்வளவு க்யூட்டா இருக்கீங்களே என்ன செய்யலாம்...”

   

“அடிப்பாவி... நான் சொல்ல வேண்டியது எல்லாம் நீ சொல்ற??? என்ன ஆச்சு உனக்கு...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.