அவளின் முத்த எஃபேக்ட்டில் இருந்து விடுப்பட்டு கமல் எழுந்து நின்ற நேரம் வாசலின் அருகே சென்றிருந்தவள், கதவை திறக்கும் முன் மீண்டும் அவன் பக்கம் திரும்பி மெல்ல கண்ணடித்து சிரித்தாள்...
“ராட்சஸி...!” என்று புன்னகையுடன் சொல்லி விட்டு மாடி ஏறி சென்றான் கமல்...
❀✿❀✿❀✿
இது போன்ற சின்ன சின்ன இனிய நிகழ்வுகளுடன், வேறு பெரிய நிகழ்வுகள் இல்லாமல் மூன்று வாரங்கள் ஓடிச் சென்றன...
மொட்டை மாடியில் துணிகளை கொடியில் காய வைக்க வந்த சுமித்ரா, அங்கே ரோஷினி தன் ஈரமான கூந்தலை துவாலையில் துடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்...
“நான் துவட்டி தரட்டுமா???”
வெகு இயல்பாக கேட்ட சுமித்ராவிடம் வேண்டாம் என்று தலை அசைத்தாள் ரோஷினி.
சுமித்ரா துணிகளை விரித்து போட துவங்க ரோஷினி அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்....
அவளை பொறுத்த வரை சுமித்ரா ஒரு புரியாத புதிர்....
என்ன சொன்னாலும் அசையாத ஒரு ஜீவன்... முகத்தில் அந்த புன்னகை இல்லாமல் சுமித்ராவை அவள் பார்த்ததே இல்லை...
எப்படி தான் இப்படி இருக்கிறாளோ என்று ரோஷினி ஆச்சர்யப் படாத நாளே இல்லை...
அந்த குடும்பத்தில் இருந்த மற்ற அனைவரையும் விட சுமித்ரா மீது அவளுக்கு தனி பரிவு