(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

   

“சரி... ஒரு சேஞ்சுக்கு நீங்க வெட்கப் படுங்க...”

   

“நான் ஏன் வெட்கப்படுறேன்? ஐ ஆம் என்ஜாயிங்... நீ நடத்து...”

   

“ம்ம்ம்...”

   

சுமித்ரா முறைக்க, கமல் அவளை அணைத்துக் கொண்டான்...

   

மறுக்காமல் அவனின் அணைப்பில் அடங்கினாள் அவள்...

   

“இந்த லைஃப்புல எனக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் நீ தான் சுமி...”

   

“அப்போ அத்தை, ரேஷ்மி எல்லாம் என்ன?”

   

“ம்ம்ம்... அவங்க எல்லாம் உனக்கு அப்புறம் தான்...”

   

“இப்படியே பேசியே காலம் தள்ளுங்க...”

   

“ஹேய்...”

   

கமல் எதுவோ சொல்ல துவங்கிய நேரம் வீட்டின் வெளியே காலடி ஓசைக் கேட்டது...

   

“அத்தை எல்லாம் வந்துட்டாங்க போலிருக்கு...” என்றப்படி அவனின் அணைப்பில் இருந்து அவசரமாக விலகி எழுந்தாள் சுமித்ரா.

   

“நான் வந்தா உனக்கு சத்தமே கேட்காது, இது மட்டும் நல்லா கேட்கும்!!!”

   

“இப்போ எதுக்கு அலுத்துக்குறீங்க...” என்றவள், அவன் எதிர்பாராத வினாடியில் அவனின் கன்னத்தில் முத்தமிட்டு மின்னலென சென்றாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.