(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

“ஹேய் ஹேமா... என்ன இப்படி சாப்பிடுற? இரு நான் பரிமாருறேன்...”

   

“இந்தா ஸ்பூன்... எடுத்து வை...”

   

உரிமையுடன் சொன்ன தோழிக்கு பூங்கோதை கொடுத்திருந்த உணவை புன்னகையுடன் பரிமாறிய சுமித்ரா,

   

“நல்ல டாக்டர் தான் நீ... ப்ரேக்னன்ட்டா இருக்க டைம்ல அளவுக்கு சாப்பிடனும்னு உன் பேஷன்ட்ஸ் கிட்டேயாவது சொல்றீயா, இல்ல அவங்களையும் இப்படி கன்னா பின்னான்னு தான் சாப்பிட சொல்றீயா?” என்றாள்.

   

“கொஞ்சம் நேரம் வாயை மூடிட்டு சும்மா இரு... நீ தான் சாப்பிடாம இளைச்சு போயிருக்க... என்னையும் சாப்பிட விடாம தொண தொணன்னு பேசாதே...”

   

அந்த நேரம், ஹேமாவின் செல்ஃபோன் ஒலித்தது....

   

“எனக்கு சொல்ற கன்டிஷன் எல்லாம் அந்த ஃபோனுக்கு இல்லையா டாக்டர் மேடம்?”

   

“சும்மா இரு சுமி... ராகுல் கூப்பிடுறார்...”

   

ஹேமா ஃபோனை இடது கையில் எடுத்து அவளின் கணவன் ராகுலுடன் பேச, சுமித்ரா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்....

   

“....சாப்பிட்டுட்டு தாங்க இருக்கேன்...”

   

....

   

“இல்லை சுமி வந்திருக்கா... அவ லஞ்ச் எடுத்துட்டு வந்தா...”

   

பேசியபடி சுமித்ராவை பார்த்த ஹேமா, அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.