கவனித்து விட்டு, சைகையால் ‘கண்ணை நோண்டிடுவேன்’ என்றாள்...
பதிலுக்கு கண் சிமிட்டி சிரித்தாள் சுமித்ரா...
அவசரமாக தோழியிடம் இருந்து பார்வையை திருப்பி கணவனுடன் பேச்சை தொடர்ந்தாள் ஹேமா. சுமித்ராவும் பார்வையை வேறு பக்கம் திருப்பினாள்.
சுமித்ராவிற்கு ஹேமா - ராகுல் இடையே இருந்த அன்னியோன்யம் மகிழ்ச்சியை கொடுத்தது....
ராகுல் ஒரு பெயர் பெற்ற ந்யூரோ சர்ஜன்... திருமணமே வேண்டாம் என்ற கொள்கையில் இருந்தவன். அவனின் பெற்றோர் பேரக் குழந்தை வேண்டும் என புலம்ப, அதற்காக திருமணம் செய்துக் கொள்ளாமல், ஒரு பச்சிளங்குழந்தையை சட்ட பூர்வமாக தத்தெடுத்து பெற்றோர்களிடம் வளர்க்க சொன்னவன்!
அப்படி பட்ட ராகுலுக்கு ஒரு மெடிகல் கான்ஃபரன்ஸில் ஹேமாவை சந்தித்தப் போது அவளின் மருத்துவ அறிவினாலும், அடக்கமான அழகினாலும் காதல் எனும் நோய் தொற்றிக் கொண்டது.
மெல்ல அந்த வியாதி ஹேமாவையும் பற்றிக் கொள்ள, இரண்டு பேரின் பெற்றோரும் அவர்களுக்கு திருமணம் எனும் மருந்து கொடுத்து சரி செய்து வைத்திருந்தனர்!
ராகுலின் தத்து புதல்வன் ஷ்யாமை தன்னுடைய மகனாகவே ஏற்றுக் கொண்டிருந்தாள் ஹேமா... ஐந்து வயதான ஷ்யாமும் ஹேமாவிடம் நன்கு ஒட்டிக் கொண்டிருந்தான்...
“என்ன லூசு தனியா சிரிச்சுட்டு இருக்க?”
ஹேமாவின் கேள்விக்கு பதில் சொல்லும் வண்ணம் தலை அசைத்து, “ஒன்னும் இல்லை டாக்டர்... ராகுல் பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்... அவர் நல்லா எக்சர்சைஸ் எல்லாம் செய்றாரா???” என வினவினாள் சுமித்ரா.
“எக்சர்ஸைசா??? அவரா??? ஏன்??? என்னை கேட்டா கூட பரவாயில்லை...”