“உன்னை சும்மாவே கையில வச்சு தாங்குவாரே... இப்போ நீ சாப்பிடுற சாப்பாடுக்கும், எக்ஸ்ட்ராவா உன்னுள்ள இருக்க ஜூனியர் வெயிட்டையும் சேர்ந்து தாங்கனுமே... அவரால முடியுதா???? உள்ளங்கை வலிக்குமே??”
வாய் விட்டு சிரித்த ஹேமா, “நான் இப்படி சிரிச்சே ரொம்ப நாள் ஆச்சு சுமி... நீ ஒரு ராட்சஸி...!” என்றாள்.
“தேங்க் யூ... தேங்க் யூ... உன் புகழ்ச்சியை கேட்டு என் மனம் நிறைந்தது சாப்பாட்டு ராமி... “
“இனிமேல் நான் சாப்பிடும் போது உன்னை பக்கத்திலேயே சேர்க்க கூடாது... ஆன்ட்டி கிட்ட சொல்றேன் இரு...”
“சொல்லிக்கோ.... எனக்கென்ன வந்துச்சு... நான் ஒன்னும் உன்னை விரும்பி எல்லாம் பார்க்க வரலை... ஓசில மெடிகல் கன்சல்டேஷன் செய்ய வந்தேன்...”
“ஹேய், ஆமாம் ஃபோன்ல கூட சொன்னீயே... என்ன விஷயம்... சொல்லு...”
“நீ சாப்பிட்டு முடி... அப்புறம் பேசலாம்...”
“இல்லை சுமி... இப்போவே சொல்லு... லஞ்ச் முடிச்சிட்டு ரவுன்ட்ஸ் போகனும்.... அப்புறம் பேஷன்ட்ஸ் ஃபைல் பார்க்கனும்... முடிக்கும் போது திரும்ப கன்சல்டேஷன் டைம் வந்திரும்... அப்புறம் நைட் வரைக்கும் பிஸி தான்...”
“உன் ஹெல்த்தையும் கவனிச்சுக்கோ ஹேமா....’
“ம்ம்ம்... கவனிக்க தான் செய்றேன்... நான் கவனிக்கலைனாலும் ராகுல் விட மாட்டார்...”
“அது தான் தெரிஞ்ச விஷயம் ஆச்சே... ஷ்யாம் வர போற குட்டி பாப்பா பத்தி என்ன சொல்றான்?”