ஐநூறு ரூபாய் சவாரிக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபாயா???
அதுவும் கல்லையும் கரைய வைக்கும் கெஞ்சலுக்கு செவி சாய்க்காத இவன் தருகிறானா???
திகைத்துப் போன டாக்சி டிரைவர், சுதாரித்துக் கொண்டு வண்டியை கிளப்பி செல்லவே சில நிமிடங்கள் ஆனது!
அதை எதையும் கண்டுக் கொள்ளாமல் வீட்டின் வெளியே இருந்த அழைப்பு மணியை அழுத்தினான் மித்ரன்.
ஒரு சில வினாடிகளில் கதவு திறக்கப் பட, கையில் சிறு குழந்தையுடன் நின்றாள் ஒரு பெண்.
❀✿❀✿❀✿
"இந்தா சரண்யா பால்..."
பக்கத்து வீட்டு சுலோச்சனா நீட்டிய பால் பாக்கெட்டை கையில் வாங்கிய சரண்யா, "ரொம்ப தேங்க்ஸ் க்கா..." என்றாள் .
"இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே தேங்க்ஸ் தேங்க்ஸ்ன்னு சொல்லிட்டு இருக்க போற? என் தங்கச்சி மாதிரி தான் உன்னை நான் நினைக்குறேன்..."
"தெரியும்க்கா... ஆனாலும் டெய்லி டெய்லி..."
"போதும் போதும் நிறுத்து... எங்க வீட்டுக்கு பால் வாங்கும் போது உனக்கும் வாங்குறேன், இதுல என்ன இருக்கு..."
"ஆனாலும் செய்ய மனசு வேணுமேக்கா..."
"அது என்னவோ சரி... உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லலாமா வேண்டாமான்னு