Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 05 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அன்று திருமணம் தடைபட்டப்போதில் இருந்து அவள் தினமும் அழுதுக் கொண்டுதான் இருக்கிறாள். 23 வருடங்களாக அவள் அழாத அழுகையை இந்த சில நாட்களில் சேர்த்து வைத்து அவள் அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள் ஆனாலும் அழுகை வற்றாமல் வந்துக் கொண்டுதான் இருந்தது. தன்னை உலுக்கியவர் யாரென பார்க்க அவரின் டிரைவர்
”சார் பாப்பா கூப்பிடுது சார்” என டிரைவர் சொல்ல அவரும் தலையை மெதுவாக ஆட்டிவிட்டு தன் மகளிடம் சென்றார்.
எப்படியிருந்தவள் ஆனால் இன்று சாதாரண புடவையில் எந்த அலங்காரமும் இன்றி கவலையுடன் அழுகையுடன் இருந்த தன் மகளைக் கண்டு வருந்தினார், இப்போது அவளுக்கு பக்கத் துணையாக தான் மட்டும்தான் உள்ளோம் என புரிந்துக் கொண்டதால் உறுதியாக இருந்தார்.
நேராக மகளிடம் சென்றார்
”சம்யுக்தா என்னம்மா என்னாச்சி“
“அப்பா இப்பதான் உள்ள இன்ஸ்பெக்டர் போனதைப் பார்த்தேன் ஆனா, இவங்க என்னை உள்ள விட மாட்டேங்கறாங்கப்பா, நீங்க கொஞ்சம் சொல்லுங்கப்பா ப்ளீஸ்பா” என அவள் கெஞ்ச மகளுக்காக அவரும் கான்ஸ்டபிளிடம் கெஞ்சினார்
”சார் நாங்க தப்பானவங்க இல்லை, கம்ப்ளெயின்ட் கொடுக்க வரலை, ஒரே ஒரு முறை இன்ஸ்பெக்டரை பார்க்கனும்ங்க, காலையில 9 மணியில இருந்து இங்க காத்திருக்கோம் இப்ப மணி மதியம் 3 ஆயிடுச்சி, சாப்பிடகூட இல்லைங்க ஒரு 5 நிமிஷம் பார்த்துட்டு போயிடறோம்ங்க ப்ளீஸ்ங்க” என அமைதியாக கெஞ்ச சம்யுக்தாவும் கெஞ்சினாள். அதில் அவரும்
”உங்களோட ஒரே தொல்லையா போச்சி, சொன்னா கேட்க மாட்டீங்களா நானும் 3 நாளா பார்க்கிறேன், தினமும் இங்க வந்து நிக்கறீங்க, இன்ஸ்பெக்டர் உங்களை வரவேணாம்னு சொல்லியும் கேட்க மாட்டேங்கறீங்க, அவருக்கு கோபம் வர்ற மாதிரியே நடந்துக்கறீங்க, அவர்