(Reading time: 8 - 15 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

என்னடான்னா உங்க மேல இருக்கற கோபத்தை எங்க மேல காட்டறாரு”

   

”சாரி சார் ப்ளீஸ் ஒரு முறைதான் பார்த்துட்டு போயிடறோம் சார்” என சம்யுக்தா கெஞ்ச

   

”என்னம்மா நீ, உன்னைப் பார்த்தாலும் பாவமாதான் இருக்கு ஆனா, நீயே கொஞ்சம் யோசிச்சிப்பாரு இது உனக்குத் தேவையா, எவனோ ஒருத்தன் செத்தான்னு விடாம அவனுக்காக பரிஞ்சிக்கிட்டு வந்து நிக்கறியே, படிச்ச பொண்ணுதானே நீ, உன் வாழ்க்கையை பார்த்துட்டு போகாம இங்க வந்து கஷ்டப்படறியே இது நல்லாவாயிருக்கு”

   

”செத்தார்ன்னு சொல்லாதீங்க, அவர் ஒண்ணும் சாகலை, அதோட அவர் யாரோ கிடையாது, என் புருஷன் அவர் தொலைஞ்சிப் போயிருக்காரு, அவரைத் தேடனும்“

   

”அட என்னம்மா நீ சொன்னதையே சொல்ற, இதப்பாரு நீ சொல்ற உன் புருஷன் என்ன தியாகியா, ரௌடி, தாதாம்மா அவனை என்கவுன்டர்ல போடனும்னு போலீஸ்க்கு ஆர்டர் கொடுத்திருந்தாங்க ஆனா, அவனே அவனோட எதிரி கையால செத்துட்டான், அவனோட பிணம் கூட கவர்மெண்ட் ஆஸ்பிட்டல் மார்சுவரியில இருக்கு, அதை போய் பாரு அதை விட்டுட்டு இங்க வந்த ஏன் நிக்கற”

   

”ஆஸ்பிட்டலுக்கு நான் போனேன் ஆனா, அங்கிருக்கற உடம்பை காட்ட மாட்டோம்னு அங்கிருக்கறவங்க சொல்றாங்க, கேட்டா இது போலீஸ் கேஸ்ன்னு சொல்றாங்க, போலீஸ் அனுமதியோட வாங்க காட்டறோம்னு சொல்றாங்க, அப்ப கூட உடம்பை தரமுடியாதுன்னுட்டாங்க ஆனா, எனக்கு என்னவோ அந்த உடம்பு என் புருஷனோடது இல்லைங்க அவர் இன்னும் உயிரோடதான் இருக்காரு” என்றாள் உறுதியாக

   

”என்னம்மா நீ தில்லை செத்துட்டான்னு 4 நாளா பேப்பர்லயும் மீடியாலையும் காட்டறாங்களே  அதை நீ பார்க்கலையா”

   

”பார்த்தேன் ஆனா, அவர் உடம்பை காட்டலையே, அவர் முகத்தை நான் பார்த்தாதான் அது தில்லைன்னு நான் நம்புவேன்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.