”ஒரு முறை அவரை நாங்க பார்க்கனும்“
”இதப்பாருங்க இன்ஸ்பெக்டர்கிட்ட நான் போய் பேசறேன், அவர் சரின்னா வந்து கூப்பிடறேன், அவர் இல்லைன்னுட்டா நீங்க போயிடனும்”
”வேற வழியில்லைங்களா, அவரை விட பெரிய ஆபிசர் இருப்பாரே வேணும்னா நாங்க கமிஷனர்கிட்ட போகட்டும்ங்களா” என சம்யுக்தா கேட்க
”அப்படி எதுவும் செய்யாதம்மா, பிரச்சனை பெரிசாயிடும், அவருக்கு மேல கமிஷனர் இருக்கலாம் ஆனா, தில்லை கேஸ்ல யாரும் உனக்கு உதவ மாட்டாங்கம்மா, ஸ்பெஷல் ஆபிசர் இன்னும் வரலை அவர் வந்தா வேணா உங்க பேச்சை கேட்கலாம்”
“யாரு அவரு, எப்ப வருவாரு“
”இதுக்கு முன்னாடி இருந்தவரை ட்ரான்ஸ்வர் பண்ணிட்டு புதுசா ஒருத்தரை நேத்துதான் இறக்கியிருக்காங்களாம், தில்லை செத்ததால சிதம்பரத்தில எந்த பிரச்சனையும் வரக்கூடாது, ஊரே அமைதியா இருக்கனும்னு என்னவோ சொல்வாங்களே சட்டம் ஒழுங்கு சரியா இருக்கான்னு பார்த்து வைச்சிக்க ஸ்பெஷல் ஆபிசரை கொஞ்ச நாளைக்கு இங்க போட்டிருக்காங்க, அவர் பேரு சிதம்பரம், அவர் இன்னும் வரலை எப்ப வருவார்ன்னு எனக்குத் தெரியாது, எப்ப அவர் வந்தாலும் உங்களைப்பத்தி நான் சொல்லி வைக்கிறேன், தில்லையை பத்தி எதுவும் தெரியாததால உனக்கு அவர் உதவி செய்யலாம்”
”அப்படின்னா இப்ப நாங்க என்ன செய்றது“
”இப்போதைக்கு நீங்க இங்கிருந்து கிளம்புங்க, அந்த சிதம்பரம் சார் வந்ததும் அவர்ட்ட பேசிட்டு உங்களுக்கு போன் பண்றேன், இங்க நீங்க எவ்ளோ நேரம் நின்னாலும் பிரயோசனமில்லை“
”சரிங்க நாங்க கிளம்பறோம், இந்த ஊர்லயேதான் இருப்போம் சிதம்பரம் சார் வந்ததும் தகவல் கொடுங்க” என சிவசங்கரன் சொல்ல அதற்கு கான்ஸ்டபிளும் சரியென்றார்.