"ப்ச்... இல்லைம்மா, இப்படி ரொம்ப நல்லவளா நீ இருந்தா ஒன்னும் செய்ய முடியாது... கம்பெனி பேருல வாங்கின லோன் எங்கேயோ வந்து நிக்குது..."
"அது லட்ச கணக்குல இருக்கு சார்... வேலை செய்றவங்க சம்பளத்தை குறைக்குறதினால ஒரு வித்தியாசமும் இருக்க போறதில்லை..."
"ஹும்... அது என்னவோ சரிம்மா...."
"அந்த இன்சூரன்ஸ் பணம் வந்தா லோனை...." சொல்லிக் கொண்டே போன சரண்யாவின் கண்கள் மின்னின...
சேகருக்கு அவள் மனதில் ஓடும் எண்ணம் புரிந்தது...
"வேண்டாம் சரண்யா, கம்பெனியை நீ தொடர்ந்து நடத்தனும்னா அந்த பணம் மட்டும் தான் ஓரே வழி... இல்லைன்னா..."
சேகர் மேலே சொல்ல மனமில்லாமல் நிறுத்தினார்...
"புரியுது சார்... ஆனால் அத்தை இருக்க நிலைமை பத்தி தெரிஞ்ச பிறகும் சும்மா இருக்க முடியுமா???"
"அப்போ? என்ன செய்ய போற?"
"இன்சூரன்ஸ் பணத்தை மாமாவுக்கே கொடுக்க சொல்லி நோ அப்ஜெக்ஷன் லெட்டர் தர போறேன்..."
"சரி, அவங்க ஆபரேஷன் நல்ல படியா நடக்கும்... ஆனால் கம்பெனி???"
சரண்யாவிடம் இந்த கேள்விக்கு பதிலில்லை! மௌனமாக இருந்தாள்!