Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 06 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அவளின் அழகும் கெஞ்சும் விதமும் கண்களில தெரிந்த உறுதியும் சிதம்பரத்தை அசைத்தது. அவனும் திருமணமாகாதவன்தான், வாழ்க்கையில் திருமணமே செய்யாமல் காவல்துறையில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என உறுதிமொழி எடுத்தவன் ஆனால் இன்று சம்யுக்தாவை கண்ட மறுநொடியே அவனது உறுதிமொழியெல்லாம் பஞ்சு போல பறந்துவிட்டது. அவளை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. திருமணம் என்று ஒன்று ஆனால் சம்யுக்தாவை போல ஒருத்தியை செய்துக் கொள்ள வேண்டும் என ஆசைக் கொண்டான். அந்த ஆசையில் அவளுக்கு உதவ எண்ணம் கொண்டான்.
”ஓகே ஏதோ சொல்றீங்களேன்னு அனுமதி தரேன் ஆனா, ஒரு கன்டிஷன்”
”என்னது”
”உங்க மேல எனக்கு நம்பிக்கை வரலை, நானும் இந்த ஊருக்கு புதுசு, அதனால நானும் உங்களோட வருவேன்” என சொல்ல அவள் பெருந்தன்மையாக சரியென்று தலையாட்டினாள். அவனோ கான்ஸ்டபிளை அழைத்து தில்லையின் கேஸ் ஃபைலை எடுத்துக் கொண்டு உடன் வருமாறு கட்டளையிட்டான்.
சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு அவரது தந்தையும் ஸ்டேஷன் விட்டு வெளியேறி தனது காரில் ஏறிக் கொண்டார். அவரது கார் பிஎம்டபுள்யு அதைக் கண்டு சிதம்பரம் வியந்தான்.
”பெரிய பணக்காரங்களா இருக்காங்க, எப்படி தில்லைகிட்ட மாட்டினாங்க” என கான்ஸ்டபிளிடம் கேட்க
”அந்த பொண்ணுதான் தெரியாம போய் மாட்டிக்கிச்சி, சென்னையில சம்யுக்தா ஜவுளி கடையோட ஓனர் சார் இவர். சென்னையில இருக்கற கமிஷனர் உதவியோட இங்க வந்தாங்க சார்”
”இவளுக்கென்ன தலையெழுத்தா, செத்தவன் என்ன தியாகியா, அவனுக்காக இப்படி உருகறாளே”
”என்னத்த சொல்றது சார், அவங்களோட அப்பா கூட வேணாம் விட்டுடுங்கறாரு இந்த