(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

பொண்ணுதான் புருஷன் வேணும்னு அடம்பிடிக்குது“

   

”அப்படியா கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்தான் ஆச்சிங்கறா, பெரிசா அந்த தாதாவோட என்னத்த வாழ்ந்துடப் போறா, இன்னொரு கல்யாணம் பண்ணிக்காம இப்படி இருக்காளே முட்டாளா இவள்“

   

”தெரியலை சார் ஒருவேளை தில்லை ஏதாவது பணப்பட்டுவாடா வைச்சிருப்பான் போல அதுக்காக வந்திருக்கலாம்”

   

”இருக்கலாம் கண்டுபிடிக்கலாம் என்கூட வா” என அழைக்க போலீஸ் ஜீப்பில் சிதம்பரமும் கான்ஸ்டபிளும் ஏறிக் கொண்டதும் வண்டி கிளம்பியது பின்னாடியே சம்யுக்தாவின் கார் சென்றது.

   

சிறிது நேர பயணத்தில் அரசு மருத்துவமனை வரவும் அனைவரும் வண்டிகளை விட்டு இறங்கினார்கள்.

   

அதில் சிதம்பரம் சம்யுக்தாவிடம் தேடி வந்தான்

   

”ஒரு முறைதான் அனுமதி தருவேன், டெட்பாடியை நல்லா பார்த்துக்குங்க, அடுத்த முறை கேட்டா கூட காட்ட முடியாது, இது போலீஸ் கேஸ் வேற, டெட்பாடியை எப்ப தரனும்னு சொல்றாங்களோ அப்பதான் தரமுடியும் புரியுதா” என கேட்க அவளோ

   

”சரிங்க ஆபிசர்” என்றாள் அமைதியாக, அவளின் கண்ணில் ஆர்வம் தெரிந்தது. அவனுக்கு அவளின் ஆர்வமே குழப்பத்தைத் தந்தது, அவர்களை அழைத்துக் கொண்டு ஆஸ்பிட்டலுக்குள் சென்றான்.

   

மார்ச்சுவரி அறைக்கு முன் வரவும் சிதம்பரம் சம்யுக்தாவிடம்

   

”பயந்துட மாட்டீங்களே உள்ள நிறைய டெட்பாடிஸ் இருக்கும்” என சொல்ல அதற்கு சிவசங்கரனோ

   

”அவள் இருக்கட்டும் நான் வேணா உள்ள போய் பார்க்கிறேனே” என சொல்ல அதற்கு அவள் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.