(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

மறுத்தாள்

   

”இல்லைப்பா நானே போறேன், உங்களை விட என்னால அவரை நல்லா அடையாளம் கண்டுபிடிக்க முடியும்”

   

”இப்பவும் சொல்றேன் உள்ள வந்து பயந்துடக்கூடாது” என சிதம்பரம் சொல்ல அவளோ சிரித்தபடியே

   

”நான் தில்லையோட பொண்டாட்டி, பயம்னா அதுக்கு அர்த்தம் கூட எனக்குத் தெரியாது” என சொல்ல அவனோ சலித்துக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றான் அவர்களை.

   

உள்ளே சென்றதும் அந்த சூழ்நிலை அவளை பயமுறுத்தியது ஆனாலும் அதை பொறுத்துக் கொண்டாள். அவள் பயப்படுவதைக் கண்டு சிதம்பரம் சிரித்தான்

   

”பயமா இருக்கா” என கேட்க அவளோ இல்லை என்பது போல் கெத்தாக தலையாட்டினாள். அவளின் இந்தச் செயலை வெகுவாக ரசித்தவன் அங்கிருந்த ஆளிடம் தில்லையை பற்றி விவரம் சொல்லிவிட்டு

   

”தில்லையோட டெட்பாடியை காட்டுங்க ”என்றான் சிதம்பரம்.

   

அவனே அதுவரை பார்த்ததில்லை, போட்டோவில் பார்த்ததோடு சரி நேரில் இப்போதுதான் பார்க்கிறான், கையில் தில்லை பற்றின ஃபைல் இருக்கிறது அதை விட சம்யுக்தா உறுதியாக இருந்தாள், அதைக் கண்டு அவள் மேல் பரிதாபமேபட்டான் சிதம்பரம்.

   

அங்கிருந்த ஊழியரோ சுவரில் இருந்த பலதரப்பட்ட அலமாரியில் இருந்து தில்லையின் உடல் இருந்த பெட்டியை இழுத்து முகத்தை திறந்து காட்டினான். சம்யுக்தாவோ அஞ்சவில்லை ஆர்வமாக சென்றுப் பார்த்தாள். பார்த்த உடன் முகம் மலர்ந்தாள். அதைக் கண்டு குழம்பினான் சிதம்பரம்

   

”ஹலோ என்ன சந்தோஷமா இருக்கீங்க உங்க புருஷன் இது வருத்தமாயில்லை”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.