”ஒரு ஊர்ல ஒரு தாதாதான் இருப்பான், ஒரே பேர்ல எத்தனை ஆட்கள் இருப்பாங்களாம்”
”இருப்பாங்க ஆனா, என் புருஷன்தான் தில்லை”
”அப்ப அங்கிருக்கற டெட்பாடி, அது யாரு”
”அது எனக்குத் தெரியாது ஆனா, அவர் என் புருஷன் இல்லை” என தெளிவாகவும் உறுதியாகவும் சம்யுக்தா சொல்ல சிதம்பரம் கான்ஸ்டபிளைப் பார்க்க அவனோ
”சார் என்னை ஏன் பார்க்கறீங்க, எனக்குத் தெரிஞ்சி 30 வருஷமா நான் சர்வீஸ்ல இருக்கேன், தில்லைன்னா அது இவன்தான் சார், இந்தப் பொண்ணு தப்பா சொல்லுது” என சொல்ல அதற்கு சம்யுக்தாவோ
”இல்லைங்க நான் பொய் சொல்லலை உண்மையை சொல்றேன்“
”ஓ அப்படியா சரி தில்லையோட” என எதையோ சொல்ல வந்தவன் பொண்டாட்டி என அவளை சேர்த்துச் சொல்ல அவனுக்கு முடியவில்லை சட்டென பேச்சை மாற்றினான்
”தில்லையோட போட்டோ இருக்கா”
”இல்லை”
”உங்களுக்கு எப்படி கல்யாணம் ஆச்சி அதற்கான ஆதாரம் கூட இல்லையா“
”நாலு சுவத்துக்குள்ள கல்யாணம் ஆச்சி”
”புரியலையே அவன் உங்களை தூக்கி்ட்டு வந்து கட்டாயமா ஏதாவது”
”இல்லைங்க நானாதான் அவரை தேடி வந்தேன்”