(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”இவர் என் புருஷன் இல்லை” என்றாள் சட்டென அதைக் கேட்டு சிதம்பரம் கான்ஸ்டபிளை முறைக்க அவரோ சம்யுக்தாவிடம்

   

”ஏம்மா என்னம்மா பேசற நீ, இவர்தான் தில்லை” என கான்ஸ்டபிள் சொல்ல அதற்கு சம்யுக்தாவோ

   

“இல்லைங்க இவர் தில்லையில்லை, இவரைப் பாருங்க எப்படியும் இவருக்கு 50 வயசிருக்காது, என் புருஷனுக்கு 30 வயசு கூட தாண்டலை, அவருக்கு தலைமுடி நீளமா வளர்த்துவிட்டிருப்பார், அதை போனிடெயில் போல போட்டிருப்பாரு, அப்புறம் தாடி மீசை எல்லாம் வளர்த்து வைச்சிருப்பாரு, அப்புறம் கழுத்தில ருத்ராட்சை கொட்டையை கயிறுல கட்டி மாட்டியிருப்பாரு அவர்தான் தில்லை” என்றாள் அதைக் கேட்டு கான்ஸ்டபிளோ சிதம்பரத்திடம் 

   

”சார் இந்த பொண்ணு உளறுது சார்”

   

”யோவ் ஒழுங்கா சொல்லுய்யா இந்தாளு யாரு“

   

”இவன்தான் சார் தில்லை, பிரபல தாதா ரௌடி” என சொல்ல அவளோ

   

”இல்லைங்க இவர் தில்லையில்லை, அப்ப என் புருசன் உயிரோடதான் இருக்காரு, காணாம போயிட்டார் போல கண்டுபிடிச்சி கொடுங்க ஆபிசர்” என்றாள் சிதம்பரத்திடம் அதைக் கேட்டு அவனுக்கு குழப்பமே வந்தது. 

   

இது என்ன புது தலைவலி என நினைத்தபடியே அவர்களை அங்கிருந்து அழைத்துக் கொண்டு மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் சென்று தனது அறையில் அவர்களை அமரவைத்துவிட்டு தானும் அமர்ந்து சம்யுக்தாவை பார்த்தான். அவளோ மகிழ்ச்சியாக உற்சாகமாக இருந்தாள். அவளின் அந்த மகிழ்ச்சியை ரசித்த சிதம்பரமோ அவளிடம்

   

“இப்ப பார்த்த தில்லைங்கறவன்தான் இறந்தவன், நீங்க சொல்ற தில்லை யாரு”

   

”அவரும் தாதாதான்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.