"இதுக்கு மேல பாங்குல டைம் எல்லாம் கேட்க முடியாதும்மா..."
சரண்யாவிற்கே அது தெரியும்!
எதிரே இருந்தவளை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்த சேகர்,
"பேசாமல் கம்பெனியை வித்துடுறது தான் நல்லது சரண்யா," என்றார்.
சரண்யா திகைத்து வாயடைத்துப் போனாள்.
"நான் உன் நல்லதுக்காக தான் சொல்றேன் சரண்யா... இப்படியே போனால் திவால் லிஸ்ட்ல போட்ருவாங்க... கம்பெனியும் கை விட்டு போயிடும்... அதுக்கு முன்னாடியே விக்குறது தான் நல்லது!"
❀✿❀✿❀✿
இரண்டு வாரங்கள் ஓடி இருக்க, இன்சூரன்ஸ் பணம் கொண்டு கற்பகத்தின் அறுவை சிகிச்சை நல்ல படி முடிந்திருந்தது.
சரண்யா உதவியது தெரிந்திருந்த போதும் கதிரேசன் இப்பொழுதும் அவளை வெறுக்க தான் செய்தார்...
எனவே சுரேஷிடம் கற்பகத்தின் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு ஸ்கூட்டியை கம்பெனி நோக்கி திருப்பினாள் சரண்யா...
சேகர் கம்பெனியை விற்கும் முயற்சியில் இறங்கி இருந்தார்...
சரண்யாவிற்கு அதில் உடன்பாடு இல்லை என்றாலும் வேறு வழி இல்லை என்பதால் சம்மதித்திருந்தாள்... இரண்டு வேண்டுகோள்களுடன்...