(Reading time: 9 - 18 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

சென்னையில் இருந்த போது சரியாக அவளின் பிறந்த நாளன்று தனது தோழிகளுடன் கடற்கரையில் சுற்றித்திரியும் ஏழை பிள்ளைகளுக்கு இனிப்பும் புதுத்துணியும் பொம்மைகளும் கொடுத்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.

   

அவளின் பிறந்த நாளுக்காக இப்படி ஒரு ஏற்பாடு செய்திருந்தாள், வழக்கம் போல பார்ட்டி வைத்து கொண்டாடுவதில் ஆர்வம் விட்டு போனது, இது போல ஏழைகளுக்கு உதவ எண்ணி கடற்கரைக்கு வந்திருந்தாள் கண்ணில் தெரியும் பிள்ளைகளுக்கு தான் வாங்கிவந்த பொருட்களை மகிழ்ச்சியாகத் தந்தாள்.

   

இரவு நேரம் நெருங்கவும் கடல் அலைகள் பாதத்தை வருடிச் செல்லும் இடத்திற்குச் சென்றார்கள். இரவு நேர கடல் அலையை ரசித்தபடியே தன் தோழிகளுடன்

   

”பர்த்டே கேக் வெட்டவா” என கேட்க அவர்களும் சரியென்றார்கள். 

   

தனது டிரைவரைக் கொண்டு நடப்பதை போட்டோ எடுக்கலானாள். அவரும் அவளின் ஒவ்வொரு நிகழ்வையும் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.

   

4 தோழிகளும் தங்களின் கையையே கொண்டு வந்த கேக்கிற்கு டேபிள் போல ஆக்க சம்யுக்தாவோ மெழுகுவர்த்தியை ஊதி அனைத்துவிட அவர்களும் ஹாப்பி பர்த்டே பாட்டு பாட அதைக் கேட்டபடியே அந்த சின்ன கேக்கை 5 துண்டுகளாக வெட்டினாள். பெண்கள் கைகள் கேக்கை பிடித்திருப்பதால் அவளே ஒவ்வொரு துண்டு கேக்கையும் அவர்களின் வாயில் ஊட்டிவிட்டாள். அவர்களும் மகிழ்ச்சியோடு சாப்பிட்டுக் கொண்டே அவளுக்கு வாழ்த்துக் கூறினார்கள். 5வது துண்டு அவள் எடுக்கையில் எவனோ ஒருவன் ஓடிவந்து அவள் மீது மோதினான்.

   

அதில் அந்த பெண்களும் நிலை தடுமாறினார்கள் நல்லவேளையாக சம்யுக்தா அந்த 5வது துண்டை பத்திரமாக வைத்திருந்தாள். 

   

அவளை இடித்தவன் மரியாதையாக அவளிடம் மன்னிப்பு கேட்டான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.