ஏறிக் கொண்டு அங்கிருந்து சென்றே விட்டான். அங்கிருந்த வெளிச்சத்தில் அவனை நன்றாகவே பார்த்துக் கொண்டாள், அதே முகம்தான் அவன்தான் இப்போது தோசை சுட்டுக் கொண்டிருந்தான்.
இதில் சிதம்பரமோ இடையில் புகுந்து அவளிடம்
”ஆமா பீச்ல பர்த்டே கொண்டாடினப்ப போட்டோ எடுத்ததா சொன்னீங்களே அதுல தில்லையோட முகம் இருக்குமே பார்த்தீங்களா”
”சாரி அந்த போட்டோ இருட்டுல எடுத்தது ஏதோ கேன்டல் லைட் வெளிச்சத்தில நாங்க தெரிஞ்சோம் ஆனா, இருட்டுல அவரு சரியா தெரியலை அதை அன்னிக்கே நான் டெலிட் பண்ணிட்டேன்”
”அது இருந்திருந்தா இப்ப பயன்பட்டிருக்குமே”
”இல்லை அதுல அவர் தொப்பி போட்டிருந்தாரு, முகத்தை அதுவே பாதி மறைச்சிருந்தது, அந்த போட்டோல கூட தொப்பிதான் தெரிஞ்சது அதை தாண்டி அவர் முகம் தெரியலை ஆனா தாடியிருந்தது தெரிஞ்சது அதை வைச்சி யாராலயும் கண்டுபிடிச்சிருக்க முடியாது”
”ஓகே மேல சொல்லுங்க” என அவன் சொல்ல உடனே அவளும் நடந்த கதையை தொடந்தாள்.
பிறந்த நாள் அன்றைய நினைவு வரவும் அவளுக்கு கோபமே வந்தது
”அடப்பாவி நீயாடா அது, உருப்படாதவனே பாவி பாவி” என திட்டியே விட்டாள் சம்யுக்தா அவனோ சிரித்தபடியே அவளைப் பார்த்து
”தோசை சாப்பிடறியா சால்னாவும் இருக்கு, செமையா இருக்கும்” என்றான் அதைக் கேட்டு அவளுக்கு வெறுப்பே வந்தது
”பாவி பாவி நீ நல்லாயிருப்பியா” என திட்ட அவனோ