”நல்லாதானே இருக்கேன் ஒரு குறையும் இல்லை”
”என் வாழ்க்கையை அழிச்சிட்டு இப்படி சந்தோஷமா இருக்கியே நீயெல்லாம் ஒரு மனுஷனா”
”ஆமாம் நான் சந்தோஷமா இருக்கேன், அதுக்காக உன் வாழ்க்கையை நான் அழிக்கலையே, நியாயமா பார்த்தா நீதான் எனக்கு நன்றி சொல்லனும்”
”எதுக்கு”
”எதுக்கா உனக்கு வர வேண்டிய மோசமான வாழ்க்கையில இருந்து உன்னை நான் காப்பாத்தினேனே அதுக்கு”
”எதைச் சொல்ற”
”உனக்குப் பார்த்த டாக்டர் மாப்பிள்ளை நல்லவன் இல்லை மோசமானவன்”
”அதை நீ சொல்றியா, நீ ரொம்ப ஒழுங்கா”
”இல்லைதான் ஒரு கெட்டவனுக்குதான் இன்னொரு கெட்டவனை நல்லா தெரியும், நீ வேற எனக்கு அன்னிக்கு சென்னையில உதவி செஞ்சல்ல, அதுக்கு கைமாறா உனக்கு நல்லது செஞ்சேன் நீ மட்டும் அந்த டாக்டர் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணியிருந்தா உன் வாழ்க்கை நாசமா போயிருக்கும்“
”நான் உனக்கு சென்னையில உதவி செஞ்சேனா இல்லையே, நான் உனக்கு கேக் தானே கொடுத்தேன்“
”ஆமாம் அன்னிக்கு போலீஸ் வந்து தேடிக்கிட்டிருந்த ஆளே நான்தான், என்னை காட்டிக்கொடுக்காம காப்பாத்தி விட்டதுக்கு ரொம்ப நன்றி, எனக்கு இந்த ஊரைத்தான் தெரியும், இங்க இருக்கற எல்லா வழியும் தெரியும் ஆனா, சென்னையை பத்தி எனக்கு எதுவும் தெரியாது, அதுல நான் போலீஸ்ல மாட்டிக்க இருந்தேன், நல்லவேளை நீ என்னைக்