(Reading time: 9 - 18 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

அந்நேரம் அந்த பக்கம் சில போலீஸ் ஆபிசர்கள், கான்ஸ்டபிள்கள் எல்லாரும் ஓடிவந்தனர். நேராக அவர்கள் சம்யுக்தாவிடமே வந்தார்கள்

   

”என்ன செய்றீங்க இங்க” என கேட்க அதற்கு சம்யுக்தாவோ

   

”சாரி சார் இன்னிக்கு என் பிறந்த நாள், அதான் கேக் வெட்டி பார்ட்டி பண்றோம்”

   

”இது ரொம்ப முக்கியமா இப்ப, அங்க ஒருத்தன் செத்துக்கிடக்கறான், கொன்னவன் இந்த பக்கம்தான் வந்திருக்கனும், சந்தேகப்படற மாதிரி யாராவது இந்த பக்கமா வந்தாங்களா நீங்க பார்த்தீங்களா” என கேட்க அவர்களோ இல்லை என சொல்ல அவர்களுடன் இருந்தவனைக் கண்ட ஒரு போலீஸோ

   

”யார் இவன்” என கேட்க அவனோ

   

”நான் சம்யுக்தாவோட ப்ரெண்ட்” என்றான் சட்டென அதில் அவளும் ஆம் என தலையாட்ட 

   

”இங்கல்லாம் நிக்காதீங்க போங்க இங்கிருந்து” என விரட்ட அவர்களும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

   

இப்படியே அங்கு வந்திருந்த அனைவரையும் விரட்டியபடியே போலீஸ் செல்ல சம்யுக்தாவோ தன்னுடன் வந்துக் கொண்டிருந்தவனைக் கண்டு திகைத்தாள்

   

”நீங்க எங்களோட ஏன் வர்றீங்க”

   

”இல்லை என் வண்டி அந்தப் பக்கமா இருக்கு அதான்” என அமைதியாக பதில் சொல்லிவிட்டு வேறு பக்கமாகச் சென்றான் அவளும் சரியென தலையாட்டிவிட்டு தனது தோழிகளுடன் சிரித்து பேசியபடியே வண்டிகள் இருந்த பார்க்கிங் இடம் வரவும் ஒரு வண்டி வேகமாக வந்து சம்யுக்தாவின் பக்கம் வந்து நின்றது, உடனே அவன் சம்யுக்தாவிடம்

   

”நான் கிளம்பறேன் நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி” என சொல்லிவிட்டு வண்டியில் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.