(Reading time: 9 - 18 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

”மன்னிச்சிடுங்க வேணும்னே செய்யலை, இருட்டுல தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன் சாரிங்க” என மூச்சிரைக்கச் சொன்னான். 

   

அவனின் தலையில் கேப் இருந்தது, கூலிங் க்ளாஸ் வேறு, தாடி மீசை சகிதம் காலேஜ் மாணவன் போல ஜீன்ஸ் டீசர்ட்டில் இருந்தான். அவனது கட்டுக்கோப்பான உடல் வாகைக் கண்டு அவளது தோழிகளோ தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டார்கள். அவளோ அவனை அந்த இருளிலும் ஓரளவு பார்த்துக் கொண்டாள். அவனோ அவளது கையில் இருந்த கேக்கையும் அங்கிருந்த சூழ்நிலையையும் புரிந்துக் கொண்டு அவளுக்கு

   

”பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்றான். 

   

அதைக் கேட்டு அவளோ சிரித்தபடியே கையில் இருந்த கேக்கை அவனிடம் தர அவனோ மிகுந்த பசி போல வாங்கிய உடனே சாப்பிடத் தொடங்கினான். அதைக் கண்டு அவளுக்கு புன்சிரிப்பே வந்தது. அவளது தோழிகளும் அவளிடம்

   

”சம்யுக்தா வாடி போலாம் நேரமாகுது உன் வீட்ல தேடுவாங்க” என ஒருத்தி அழைக்க அதைக் கேட்ட சம்யுக்தாவும் டிரைவரிடம் இருந்து தனது ஹேண்ட் பேக்கை வாங்கி அதில் இருந்த தனது கல்யாண பத்திரிகையை தனது தோழிகள் ஒவ்வொருவரிடமும் தந்துவிட்டு

   

”கண்டிப்பா கல்யாணத்துக்கு வரனும்”

   

”கண்டிப்பா நாங்க வராம இருப்போமா என்ன” என சொல்ல அதற்குள் அவனும் கேக் சாப்பிட்டு முடித்துவிட்டு அவளிடம் நன்றி என்றான், என்னவோ அவளுக்கு அவன் நல்லவன் என தோன்றவே அவனுக்கும் ஒரு பத்திரிகை தந்தாள். அவனோ அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டான்

   

”எனக்கு இன்னும் 20 நாள்ல கல்யாணம், உங்களால முடிஞ்சா வாங்க” என சொல்ல அவனும் சரியென்றான்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.