தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 29 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
போகும் வழியில் உதய் அமைதியாக யோசனையில் இருந்தான்... ப்ரியாவும் அவனை தொந்தரவு செய்யாமல், மும்முரமாக முருகனிடம் பேசிக் கொண்டே வந்தாள்.
சரத்தின் வீடு வந்ததும், காரில் இருந்து இறங்கி நடந்த உதயுடன் மௌனமாகவே சேர்ந்து நடந்தாள் ப்ரியா.
அவள் பக்கம் ஒரு பார்வை பார்த்து விட்டு, “காதெல்லாம் நொய்ங் நொய்ங்ன்னு சத்தம் போட்டுட்டு இருக்கு,” என்றான் உதய்.
“ஏன்???” என்றாள் ப்ரியா!
“வேறென்ன, நீ முருகா கிட்ட போட்ட அரட்டையில தான் இந்த சத்தம் கேட்குது... பேசிட்டே இருக்கீயே உனக்கு வாய் வலிக்கவே வலிக்காதா???”
அவனை பார்த்து புன்னகைத்த ப்ரியா,
“நான் அவ்வளவு கஷ்டப்பட்டது உங்களுக்காக தான்,” என்றாள்.
“எனக்காகவா???”
“ஆமாம், உங்களுக்காக ஸ்பெஷலா என்னை வேலைக்கே வைக்கும் போது, ஆன்ட்டி டிரைவர் கிட்ட எவ்வளவு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்திருப்பாங்க! நான் மட்டும் உங்க கிட்ட பேசிட்டு வந்திருந்தேன்னு வைங்க, அப்படியே போய் முருகன் போட்டு கொடுத்திருப்பார். அப்புறம் உங்க நிலைமை கஷ்டம் தான்...”
ப்ரியாவின் கிண்டல் பேச்சை கேட்டு எரிச்சலோடு,
“உனக்கு வாய் ரொம்ப அதிகம்,” என்று சொல்லிக் கொண்டிருந்த உதய் சட்டென பேச்சை நிறுத்தினான்.