(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

அவனின் பார்வை வேறு எங்கோ இருப்பதை கவனித்து அதே திசையில் பார்த்தாள் ப்ரியா.

   

அங்கே நந்திதா தலைக்கு குளித்ததால் ஈரமாகி இருந்த கூந்தலை கைகளால் அலைந்துக் கொண்டிருந்தாள்... அவள் இவர்களை கவனித்ததாக தெரியவில்லை!

   

உதய் இமைக்காமல் நந்திதாவையே பார்த்துக் கொண்டிருக்க, “இவங்க தானா உதய் சார்????” என கண்கள் ஜொலிக்க வினவினாள் ப்ரியா

   

“ஹும்மம்ம்ம்ம்???”

   

உதயின் உதடுகள் கேள்வியாக முணுமுணுத்தப் போதும் அவனின் கண்கள் இப்போதும் நந்திதாவிடமே இருந்தது.

   

“இவங்களே தானா???” என அவனிடம் மீண்டும் கேட்ட ப்ரியா, நந்திதா நின்றிருத்த பக்கம் பார்த்து, சத்தமாக, “ஹலோ,” என்றாள்.

   

ஈரமான கூந்தலை வெயிலில் காய வைத்தப் படி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த நந்திதா, சத்தம் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தாள்! அங்கே உதயை பார்த்ததும், சட்டென அவளின் முகத்தில் வானவில் போல அழகாக பல உணர்ச்சிகள் வந்து போனது!

   

உதயின் ஊடுருவும் பார்வை வேறு அவளை எதுவோ செய்ய, அதனால் எழுந்த வெட்கத்தையும், மனக் கிளர்ச்சியையும் மறைக்க முயன்றபடி நின்றாள் அவள்.

   

ப்ரியா அவர்கள் இருவரையும் ஆர்வத்துடன் பார்த்த படி இருந்தாள்.

   

அப்போது, “ஹலோ ஹீரோ சார், என்ன இன்னைக்கு இந்த பக்கம்???” என்றபடி அங்கே வந்தாள் துளசி.

   

நந்திதாவிடம் இருந்து கஷ்டப் பட்டு பார்வையை திருப்பிய உதய்,

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.