(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

என்றான் உற்சாகத்துடன்.

   

ப்ரியா அவனின் நாடகத்தை கலைக்காமல் அமைதியாக நின்றாள்!

   

நந்திதாவின் முகம் தான் மாறிப் போனது...!

   

“நான் உள்ளே போறேன்...” என்று மெல்லிய குரலில் தெளிவில்லாமல் முனுமுனுத்து விட்டு அங்கிருந்து சென்றாள் நந்திதா.

   

யப்பா என்னே பொறாமை... என்னே கோபம்...! என வியந்த உதயின் முகம் தானாக மலர்ந்தது.

   

துளசிக்கு இது எதுவும் ரசிக்கவில்லை! “என்ன நடக்குது உதய்?” என்றாள் கேள்வியுடன்!

   

“ஒண்ணுமில்லை அண்ணி... இவ யாருன்னு தானே கேட்டீங்க, இது ப்ரியா, அம்மாவோட சினேகிதியோட பொண்ணு,” என முழு விபரங்கள் சொல்லி ப்ரியாவை துளசிக்கு அறிமுகம் செய்தான் உதய்.

   

இதை முன்பே சொல்வதற்கு என்ன என்ற கேள்வியுடன், “ஓ...!” என ஏதோ பேசத் தொடங்கிய துளசி, ப்ரியாவின் முன் மனதில் இருப்பதை பேச வேண்டாம் என்ற முடிவு செய்தவளாய், “ஹாய் ப்ரியா! வாங்க உள்ளே போய் பேசலாம்... உதய் நீயும் உள்ளே வா...” என உபசரித்து இருவரையும் வீட்டினுள் அழைத்து வந்தாள். 

   

லிவிங் ரூமில் இருந்த ராஜசேகர், சரத் மற்றும் காமாட்சிக்கு ப்ரியாவை அறிமுகம் செய்து, சிற்றுண்டி கொடுத்து உபசரித்து விட்டு, தோழியை தேடி சென்றாள் துளசி.

   

துளசி நந்திதாவின் அறைக்குள் சென்ற போது, நந்திதா பயங்கர யோசனையில் ஆழ்ந்திருந்தாள்!

   

அவளின் பக்கத்தில் சென்று அமர்ந்த துளசி, “நீ என்ன லூசாடி நந்து?” என்றாள்!

   

சிந்தனை கலைந்து, புரியாமல், “என்ன ஒசிமம்?” என்றாள் நந்திதா!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.