“இப்படியா பேசிட்டு இருக்கும் போது திடீர்னு வருவ? நல்ல மேனர்ஸ் எல்லாம் கத்து வச்சிருக்க!”
“உனக்கு பிடிக்கலைனா சொல்லு நான் ஹாஸ்டலுக்கு போறேன்,” என சிணுங்கினாள் நந்திதா!
“ஆமாம் பிடிக்க தான் இல்லை, இப்போ என்ன?”
“சரி, நான் போறேன்!”
“ஆமாம்டி நீ வேதாளம், ஹாஸ்டல் தான் முருங்கை மரம், நினைக்குற நேரம் எல்லாம் போய் ஏறிக்கோ!”
“நான் ஒன்னும் வேதாளமும் இல்லை பிசாசும் இல்லை, நீ தான் பேய்...”
துளசி சிரித்தாள்.
“இது தான் என் ஃப்ரென்ட் நந்து! “
“ஆமாம் வேதாளமும் பேயும் ஃப்ரென்ட்ஸுன்னு கண்டுபிடிச்சேன்ல நான் உன் ஃப்ரென்ட் தான்... ஆனால்... சாரி துளசி, உன் கெஸ்ட் முன்னாடி அப்படி பீகேவ் செய்துட்டேன்... தப்பு தான்...”
நந்திதாவை ஒரு வினாடி உற்றுப் பார்த்த துளசி, பின் நந்திதா சொன்னதற்கு சம்மந்தமே இல்லாது, “நந்து, காலேஜ் படிக்கும் போதுன்னு இல்லை, இப்போவும் நீ என் பெஸ்ட் ஃப்ரென்ட் தான்,” என்றாள்!
“எனக்கு தெரியுமே ஒசிமம்! அப்போன்னு இல்லை, இப்போவும் நீயும் எனக்கு பெஸ்ட் ஃப்ரென்ட் தான்.”
“உன் பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு... பட் அக்ஷன் தான் வேற சொல்லுது...”