(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 17 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

அதில் அனைவரும் பதட்டமானார்கள். தில்லையோ சட்டென சம்யுக்தாவை பிடித்தான் அவளோ

   

”விடுடா என்னை” என கத்த

   

”ஏய் கன் ஷுட் நடக்குது காதுல விழலையா வா இப்படி”

   

”முடியாது நான் வரமாட்டேன், இதான் சாக்குன்னு என்னை கட்டிபிடிக்கப் பார்க்கறியா“

   

”ஆமா எனக்கு வேற வேலையே இல்லைப்பாரு, வாம்மா இப்படி உன்மேல குண்டு படப்போகுது”

   

”என்னைப் பத்தி நீ கவலைப்படாத”

   

”உன்னைப்பத்தி நான் ஏன் கவலைப்படனும் என் மேல பட்டுடும்னு பார்க்கறேன் வந்து சேரு”

   

”வரமாட்டேன்” என தைரியமாக நின்றாள்.

   

மறுபக்கம் அவனது ஆட்களோ எதிரியாட்களை பார்த்து துப்பாக்கி சூடு நடத்த அதைக் கண்டவன் இனி இவளிடம் பேசி பிரயோசனமில்லை என புரிந்துக் கொண்டு அவளை தன் புறம் இழுத்துக் கொண்டு அப்பார்ட்மென்ட்டை தாண்டி ஓரிடத்தில் மறைந்துக் கொண்டான். அவளையும் தன்னுடன் மறைந்திருக்கும்படி செய்து தனது ஆட்களுக்கு சிக்னல் தர அவர்களும் மறைந்துக் கொண்டார்கள் மற்றவர்கள் 

   

”எல்லாரும் போங்க” என மக்களை பார்த்து உரத்த குரலில் செல்ல ஒரு நிமிடத்தில் அங்கு மக்களே இல்லை அனைவரும் பத்திரமாக வீட்டிற்குள் சென்றிருந்தார்கள்.

   

சம்யுக்தாவோ அவனுடன் சேர்ந்து இருக்கப் பிடிக்காமல் நகர முயல அவனோ தடுத்து அவளை காப்பாற்ற எண்ணி தன் ஒரு கையால் துப்பாக்கியை பிடித்தபடி இன்னொரு கையால் அவளின் இடுப்பை சுற்றி வளைத்து தன்னிடம் இழுத்து பிடித்துக் கொள்ள அவளோ முரண்டு பிடித்தாள்

   

”விடுடா என்னை முரடா விடு என்னை” என அவனது தோளில் அடிக்க ஆரம்பிக்க அவனோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.