”யப்பா சாமி என்னால முடியலை, அடியேய் துப்பாக்கிக்கு நீ நல்லவளா கெட்டவளான்னு தெரியாது, அவங்களை பொருத்தவரை நீ என்கூட இருக்க அப்படின்னா நீ என் ஆளுன்னுதான் அவங்க நினைப்பாங்க”
”என்னது நான் உன் ஆளா” என கத்த அவனோ
”அப்படின்னு நான் சொல்லலை, அவங்க அப்படி நினைப்பாங்கன்னு சொன்னேன் போதுமா, என் காதுகிட்ட வந்து கத்தாத பேசாம இரு” என அவளை விடாமல் இன்னும் இறுக்கிபிடித்தபடியே தலையை வெளியே நீட்டி என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு அவளிடம்
”நல்லா கவனி ஒரு வண்டி அதுல மொத்தம் 3 பேர் இருக்கானுங்க, ஒருத்தன் வண்டி ஓட்டறான், இன்னொருத்தன் கிட்ட துப்பாக்கியிருக்கு அந்த லூசு கண்ணாபின்னான்னு சுட்டு வைக்குது, 3வதா இருக்கறவன் கையில துப்பாக்கியில்லை ஆனா, அரிவாள் இருக்கு இந்த நிலைமையில உன்னைக் காப்பாத்திக்க நீ என்ன செய்வ”
”உன்னை அவங்ககிட்ட கொடுத்துட்டு, என்னை நான் காப்பாத்திக்குவேன்” என்றாள் பட்டென அதைக் கேட்டு அதிர்ந்தேவிட்டான் தில்லை ஒரு முறை அவளின் முகத்தை பார்த்துவிட்டு
”நீ செஞ்சாலும் செய்வ, இனி உன்னை காப்பாத்தறதை விட என்னை நான் காப்பாத்திக்கிறேன்” என சொல்லி அவளின் இடையை பிடித்திருந்த கையை மெல்ல விலக்க அவளோ
”அப்பா” என முனகினாள்
”என்னாச்சி“
”வலிக்குது”
”எங்க காட்டு” என சொல்லியபடியே அவளின் இடுப்பை பார்க்க அவளோ அவனது தோளில் ஒரு அடி போட்டாள்.